அநாதையின் கேள்வி

=====================
கர்ப்பத்து வாசற் கதவடைத்து நீயிருந்தால்
சொர்க்கத்தி லேனும் சனித்திருப்பேன். – அர்ப்பணமாய்
உன்னிளமை கொண்ட உணர்ச்சிக்கு ஆட்பட்டு
என்னைச் சுமந்த தெதற்கு?

பருவத்தின் ஆசைப் பசிதீர்த்த பாவி
கருவேற்றிச் சென்றக் களங்கம் – உருபெற்று
ஊர்தூற்ற வென்று ஒதுக்கித் தெருவிட
சீர்கெட லாகுமோ செப்பு.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (1-Mar-17, 10:20 am)
பார்வை : 83

மேலே