நீ மட்டும்

என்னவனே..,
உன் இமைகளோடு சேர்ந்து தொலைந்ததடா என் இதயமும்..!
என் அன்றாட பொழுதுகள் நீயின்றி அடம்பிடிக்கும்.., மழலையின் பிடிவாதமாய்..!
கனவுகளில் உறக்கங்கள் வியாபித்து நின்றேன்..,
என் ஒவ்வொரு நொடிகளிலும், என்னுள் படர்ந்து கொண்டிருக்கும் உன்னைக் காண...!
என் ஒற்றைநொடி உறக்கங்களிலும் உன் முகம் தேடுகிறேன்..,
பட்டாம் பூச்சியாய் படபடக்கவில்லை..,
பட்டமாய் மனமும் பறக்கவில்லை..,
ஆழமாய் சுவாசம் மட்டும் 
என் கருவிழிக்குள் நீ நின்றதும்..! 

எழுதியவர் : சரண்யா (15-Feb-19, 1:58 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : nee mattum
பார்வை : 478

மேலே