காதல் கொள்

காதல் கொள்

காதல் கொள் நண்பா
இயற்கை தந்த இலவசம் இது
நுரைக்க நுரைக்க காதல் கொள்
உயிரின் மூலம் இது
இதை சுவாசித்துதான் உயிர்கூட
உயிர் வாழ்கிறது
கனவுகள் மெய்ப்படும்
நினைவுகள் நிறங்களாகும்
இது நுரைத்த பதநீர்
அள்ளி பருகு மயக்கம் வரும்
இதில்மட்டும்தான்
கொடுப்பதிலும் கொள்வதிலும்
இரண்டிலும் இன்பம்
உன் சிந்தையை சலவைசெய்யும்
சந்தன காற்று இது
ஒருமுறை சந்தித்து பார்
சிம்பொனி இசைக்கும்
மது இல்லாமலே மயக்கம் வரும்
ரோசா செடியில் முட்கள் மட்டும்
மறைந்து விடும்
உன் மழை ரசிப்பில்
மயில்கள் தோற்று போகும்
மர நிழல்கள் மணிமேடையாகும்
கடல் நீர் இனிக்கும்
கொஞ்சலில் குழந்தையாவாய்
கோபம் உன்னிடம் கோபம் கொள்ளும்
கொலுசு சத்தம் இசையாகும்
காதல்கொள் நண்பா
நுரைக்க நுரைக்க

எழுதியவர் : இளவல் (15-Feb-19, 2:09 pm)
Tanglish : kaadhal kol
பார்வை : 185

மேலே