யார் பொறுப்பு

சாலை விஸ்தரிப்பு
மரத்தை வெட்டினார்கள்
நூறு வயது தாண்டிய மரம்
இது என்ன
அங்கீகரிக்கப்பட்ட குற்றமா...?
இதற்கு இபிகோ இல்லையா
பாவம் மரம் ஏன் என்று
கேள்வி கேட்ட வாயில்லாமல்
உள்ளுக்குள்ளே அழுகிறது...

சிட்டுக்குருவிகள்
வீட்டின் முற்றத்தில்
கூடு கட்டி வாழ்ந்தது
குஞ்சுகளின் கீச் கீச்
சங்கிதம் காதுகளுக்கு
இனிமை
இன்று ஒன்றைக்கூட
காணவில்லை
ஒரு வர்கமே அழிந்து
போய்கொண்டிருக்கிறது
அழித்தது யார்
இதற்கும் இபிகோ இல்லையா
பாவம் குருவி எங்குப்போய்
முறையிடும்..

ஆறுகள் பாவம்
அதன் உடையெனும்
மணலை அள்ளி
அதை நிர்வாணமாக்கி
கொண்டிருக்கிறார்கள்
இதுவும் ஒரு ஈவ் டீசிங் குற்றம்
இதற்க்கான இபிகோ எங்கே
உறங்கிக்கொண்டிருக்கிறதா...?

வளிக்கு வலி
வளிமண்டலத்தில்
ஆங்காங்கே ஓட்டைகள்
இராசாயண கழிவுகள்
ஆறுகளாக ஓடுகிறது
மேகங்கள் எல்லாம்
அமிலமழை பெய்ய
தயாராகிறது
இதற்கு யாரெல்லாம் காரணகர்த்தாக்கள்
உணர்வார்களா...?

விளைநிலங்கள் எல்லாம்
விலை நிலங்களாகிறது
பூமாதேவிக்கு காங்கிரட் சேலை
அவளின் உடலெங்கும்
இரத்தம் உறிஞ்சும் ஊசிகளாக
ஆழ்துளை கிணறுகள்
இதற்கு ஒரு வரம்புக்கோடு
இல்லையா...?
என்னவானது பசுமை புரட்சி...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (6-Mar-18, 11:51 pm)
பார்வை : 575

மேலே