வேடம்

விந்தை உலகில் வேடிக்கை
மாந்தர் பலர்
என்பார்கள் ஆனால் சற்றும்
சிந்தைக் கொள்ளாமல்
வேடம் அணிந்துதோர் பலர்
என்பேன் நான்......!

உள் இருக்கும் ஒருவனை
தன் சூழலுக்காக
ஒளித்து வேறு ஒருவனைக்
வெளிக் கட்டுபவர்
ஓர்வகை என்றால்......!

உள் ஒன்று வைத்து
மறைத்து நா
ஒன்றில் வைத்து பேசி
பழகுவோர் ரகம்......!

உள் அழுக்கை மறைக்க
வெளுத்த வெண்ணிற
ஆடை உடுத்தி அதை
மறைத்து நடமாடு
ஒர் ரகம் என்பேன்.........!

மனிதனை நாம் பால்
வைத்து தானே
பிரித்தோம் அதில் எப்படி
இப்படி பிரிவினை
வந்த காரணம் யவர்
அறிவார்யென சிந்தை
கொள்ளுது மனம் இங்கு......?

எழுதியவர் : விஷ்ணு (7-Mar-18, 10:00 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : vedam
பார்வை : 97

மேலே