ஏதோ எதற்கோ

ஊட்டியில் எங்க வீட்டருகில் தான் அவர் இருந்தார், அவர் பெயர் கோகுல் என்று மெட்ராஸ் மியூசிக் கல்லூரியில் மியூசிக் கத்துக்கிட்டவர் மேலும் ஓவியம் ஆயில் பெயின்டிங் வாட்டர் பெயின்டிங், ஹாண்ட் ஸ்கல்ப்ச்சர் போன்றவை அவருக்கு அத்துப்படி .. வயலின், கிடார், வீணை, முரளி சிந்தூர் தபேலா மிருதங்கம், க்ளாரினெட் , ஹார்மோனியம், பியானோ, கீபோர்ட், சாக்சப்போன், நாதஸ்வரம் முதற்கொண்டு வாசிப்பார், ஹாண்ட் லூம்ஸ், மரச்சிற்பம் செதுக்குவது, சிலை வடிப்பது என இப்படி .. இப்போ க்ரீன் வேலி ஸ்கூல் ல ஆர்ட் அண்ட் மியூசிக் டீச்ச்சேர் ஆஹ் இருக்காரு ... அவருக்குன்னு ஊருல மட்டுமில்லை போற பக்கமெல்லாம் ஒரு கிரேஸ் இருக்கும் அவரோட இளமைக்காலங்கள் ல அவரை ப்ரபோஸ் பண்ணாத பெண்களே இருக்க முடியாது, அப்படித்தான் அவரைப்பார்த்துதான் எனக்கு ஓவியத்திலும் , மரச்சிற்பம் செதுக்குவதிலும், பாடுவதிலும் மியூசிக்ல இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் தோன்றியது ,, அவரோடவே இருந்து ஆர்மோனியம் கீபோர்ட் வயலின் கத்துக்கிட்டேன், கொஞ்சம் கொஞ்சமா பென்சில் ஆர்ட்ஸ் கத்து கொடுப்பாரு... நிறங்களை வெந்தாளில் எப்படி இறைக்கலாம் .. கருப்பில் சாயத்தை எப்படி சேர்க்கலாம் ... சாண்ட் ஆர்ட் கண்ணாடியில் அது பழுது ஆகாமல் கீறல் விழாமல் எப்படி இறைத்து ஓவியம் செய்யலாம் என்பதையெல்லாம் அவர் தான் கொஞ்சம் கொஞ்சமா சொல்லி கொடுப்பாரு ,,, அப்படி ,, இசைக்கருவிகளை வாசிக்கும்போது அவைகளுடைய இருப்பும் .. நம்முடைய இருப்பும் எப்படி இருக்கவேண்டுமென சொல்லிக்கொடுப்பார் ..

//காற்றுப்புகக் கூடிய அளவுக்கு விசாலமாக இருந்தது
அவருடைய அறை,
ஒரு இரவு
அவருடைய வயலின்
நீலாம்பரி வாசித்துக்கொண்டிருந்தது,
அப்போ அது
என்ன ராகம் ன்னு எனக்குத் தெரியாது,
அந்த ராகம்
என்னை
அந்த இரவு முழுவதும் உறங்க ஒத்துழைக்கவில்லை,
எங்கே கண் அயர்ந்தால்
அதை ரசிக்காமல் விட்டுவிடுவோமோ என்கிற தவிப்பு
என் சேக்கையிலிருந்து
என்னை எழச்செய்து
அவர் வசம் கொண்டுச் சென்றது,
என்ன சார்
இப்படி கொல்லுறீங்களே ன்னு கேட்டேன்

அதுவரையில் மூடியிருந்த
அந்த கண்களைத் திறந்து,
முரசதிர்ந்தது போல சிரித்தார்
இது நீலாம்பரி ராகம்
இதை இரவுதான் வாசிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு
பின்ன
இங்க வான்னு அழைத்து
அருகிலிருந்த
மற்றொரு சாய் நாற்காலியை இழுத்து
என்னை வில் போலிருத்தி
வயலின் பிடிக்கக் கற்றுக்கொடுத்தார்

நீலாம்பரியின் சுவரம் எனக்கு தட்டுப்படவில்லை
என் கைகளை,
அவர் பிடித்துக்கொண்டார்
என் கைகளை,
அவரே இயக்கிக்கொண்டிருக்கிறார்
நான் கண்கள் மூடி எங்கோ பறக்கிறேன்
விழி திறக்கும்போது
நான் மட்டுமே
அந்த அரைநிமிட சிம்பொனியை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன் ஆம் ,,,
அவர் அங்க இல்லை
தூங்க போயிருந்தார் ///

இப்படி இப்படி

சாய் நாற்காலியில் அமர்ந்து வாசிக்கப்படும் இசைக்கருவிகள் யாவை,,

முதுகை சற்று குனிந்தபடி எந்த இசைக்கருவியை வாசிக்கலாம்

நிலத்தில் அமர்ந்து முதுகுத்தண்டு விரைக்க உக்கார்ந்து வாசிக்கப்படும் கருவிகள் என்னென்ன

இதற்கெல்லாம் எப்படி பயிற்சி எடுக்கவேண்டும் (யோகா)

தமிழிசைக்கருவிகளைப்பற்றி ஒரு ஒரு மாசம் முன்பு ஒரு பதிவு போட்டிருப்பேன் .. நாலு லைக்கோ மூணு லைக்கோ வந்துச்சு நினைவிலில்லை

இப்படி நிறைய இருக்கு சரி இதையெல்லாம் விட்டுடலாம்

தபேலா, மிருதங்கம், நாதஸ்வரம், நின்னுக்கிட்டே வாசிக்கிற பறை, சாக்சப்போன், க்ளாரினெட் இவற்றிற்கெல்லாம், தண்டுவடம் விரைப்பாக இருத்தல் இன்றியமையாமை

அதனாலதான் இதை சார்ந்து வாசிக்க கற்றுக்கொள்ளுகிறவர்கள் ,, ஆரம்ப நாட்களில் பத்மாசனம் இருப்பார்கள்

பாரம்பரியமாக வாசிக்கிறவர்கள் ,,, சிறு வயது முதலே இதை வாசிக்க தொடங்கிவிடுவதால், அவர்களுக்கு இந்த ஆசனம் அவ்வளவு அவசியப்படுவது இல்லை

புதியதாக இதை கற்போர் நினைவில் கொள்ள வேண்டியது பத்மாசனம்

பைஹான், தைஹான் (பயான் தயான்)

இந்த கலாச்சாரம் மருவியது முகலாயர்களிடமிருந்து,

பைஹான் என்றால் இடது புறம் (பாயே தரஃப்) .. தைஹான் என்றால் வலது புறம் (தைனே தரஃப்)

ஒரு ஒரு அங்குலமோ அல்லது ரெண்டங்குலமோ பைஹான் தைஹானை விட உயரம் குறைந்தும் சுற்றளவு மிகைந்தும் காணும்

அது ஏன்னா .. பெரும்பாலானோர் இடதுகை பழக்கமுடையவர் கிடையாது, ஆக இடது கையை அற்பம் தூக்கி ஒரு பணியில் செயல் படுத்தும் பட்சத்தில் இடது கையின் மேல்பாகமும் பந்து கிண்ண மூட்டும் வலிக்க ஆரம்பித்துவிடும்

அதனாலேயே பைஹானை இடது கைக்கு தாளம் தட்ட ஏதுவாக இருப்பதைப்போல வடிவமைத்திருப்பார்கள்

பொதுவாக இடது கை பழக்கமுள்ளவர்களுக்கு தபேலாவின் இந்த பைஹான் தைஹான் எல்லாம் மாறும்

பந்து கிண்ண மூட்டும், இடது கையின் மேல் பாகமும் ஓய ஆரம்பித்துவிடும் பட்சத்தில்,, வாத்தியம் தாளிசை கொடுக்காது, அதில் தாளமிருக்காது

இவற்றின் செய்முறைப்பற்றிய விளக்கங்கள் கூகுளில் கிடைக்கும் பார்த்துக்கொள்ளலாம்

கஜலிற்கு ஆதிதாளம் கொடுக்கக்கூடியவை இந்த கை முரசுகள்

முகலாய மன்னர்காலங்களில் அதிகம் பேசப்பட்டவைகளில்,, கைமுரசுகளும், ஹார்மோனியமும் (கின்னாரப்பெட்டியும்) ஆகும்

பூர்வ பஜ், டில்லி பஜ், அஜ்ராரா பஜ் (பஜ் என்றால் முரசு கொட்டுதல் எனலாம்) போன்றன இவைகளுடைய வாசிப்பு பாணிகள் ஆகும் .. பெரும்பாலும் முகலாயர்களின் விசேஷங்களில் இந்த பாணிகள் அதிகம் வாசிக்கப்படும்

மிஸ்ரி, அல்லா ரக்கா, ஜாகிர் ஹுசைன் இவர்களுடைய வாசிப்பை பார்த்தோமானால் புரியும் .. தண்டு வடத்தினுடைய ,, இடவல கைகளினுடைய
பிரவாகம் இவற்றில்

எவ்வளவோ முயன்றும் என்னால் இன்னும் புல்லாங்குழலின் சிம்பொனிகளை மாத்திரம் அதிக தூரம் கடக்கமுடிவதாய் இல்லை .. நீண்ட பிராணாயாமம் மேற்கொள்ளவேண்டும் .. கொஞ்சம் கடினந்தான்

// தபேலாவுக்கென்றே
சாசனம் எழுதிக்கொடுத்துவிட்ட கைகளையும்
தோள்பட்டைகளையும் விரிக்க ... தாளந்தாட்ட ஆரம்பித்து
மழையில் நனைந்த குருவி
அதன் சிறகு படபடத்தும் வேகத்தைப்போல,
லெகுவாக துடிக்கும் இதயம்
பிடித்த எதையோக் காணுகிறபோது அதன் வேகம் கூட்டி அடித்து துடிக்கிறதைப்போல,
தபேலாவின் தாள மிழற்றொழியில்
நாம் கண்கள் மூடி பறக்கலாம் ///


நன்றி - அனுசரன்

எழுதியவர் : Anusaran (7-Mar-18, 12:00 pm)
Tanglish : yetho etharko
பார்வை : 189

மேலே