தொழிற்நுட்பங்கள் வாழ்வதற்காகவா

மாற்றம் வர வேண்டியது நல்ல தலைமைக்கான இடத்தில் அல்ல.
நம் ஒவ்வொருத்தருடைய தலையில் சிந்தனையில்...

சிறு காய்கறி வியாபாரியிடம் ஆயிரம் கேள்வி கேட்டு விலையைக் குறைக்க வாதிடும் மக்கள் தனது ஓட்டுரிமையை பணம் கொடுத்து வாங்க வருபவனிடம் ஏன் என்று ஒரு கேள்வியைக் கூட கேட்பதில்லை.

நம்மை நம்பியவனை மோசம் செய்து ஏர்செல் நிறுவனத்தை படுக்க வைத்த பணத்திற்கு விலைபோன துரோகிகள் தானே நம் நாட்டில் அதிகம்.

கொடுத்த வாக்கை மீறுவதா இவர்களுக்கு பெரிய விடயம்?

அது ஏன்டா ஏழைக்குத் தொழிற்நுட்பங்கள் குறைந்த விலையில் கிடைப்பதில்லை? என்று சிந்திக்கும் போது தான் தெரிந்து துரோகிகள் நமக்குள்ளேயே இருக்கிறார்களென்று.

நிலத்திற்கு அடியில் உள்ள நீரை, உலோகங்களைக் கண்டுபிடிக்கும் தொழிற்நுட்பங்களைக் கொண்ட நாட்டில் எங்கே சட்டவிரோதமாக ஆயுதங்களைப் பதுக்குகிறார்கள் என்பதைக் கண்டறிவது கடினமா?

செயல்படுத்தப்பட்ட அழிக்கும் ஆயுதங்களை செயலிழக்கச் செய்ய முடியாதா?

இது தான் ஆடம்பரத்தை நோக்கிப் பயணிக்கும் தொழிற்நுட்பத்தின் மிகப்பெரிய குறை.

ஆயுதங்களை விற்பவனே உலகின் அமைதிக்காக தான் போராடுவதாய் உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் காலம், காலமாக...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (6-Mar-18, 6:36 pm)
பார்வை : 527

மேலே