ஓ, நாற்றமெடுக்கும் சமூகமே

உனது கைத்துப்பாக்கி எங்கே?
துப்பாக்கியைத் தேடி எடு.
பிறரை அடக்கித் தலைவனாகத் துடிக்கும் அந்த நெற்றிப் பொட்டில் வைத்து உன்னை நீயே சுட்டுவிடு.

உன்னில் அரக்கன் இறந்துவிட்டானா?

அட! முறைக்கிறானே!

அந்தக் கட்டையை எடுத்து உன் மொட்டைத் தலையில் ஓங்கி அடி.
வன்மம் தீரட்டும்.
அதிகார வெறி ஒழிட்டும்.
பணம் கொண்ட ஆணவம் அழியட்டும்.
நான் வணங்கும் தமிழுக்கொரு சக்தி இருந்தால் மக்களை ஏமாற்றக் களமிறங்கிய மாயமான்கள் ஒழியட்டும்.

தாலி இல்லாத கல்யாணமாம்.
தலைவர் நடத்தித் தருவாராம்.
பிடிச்சு ஒட்டிக்கோ.
பிடிக்காட்டி வெட்டிக்கோ.

வாடகை சைக்கிள் போல வாழ்க்கை.
தோளுக்கு மேலே தன் குழந்தைகள் வளர்ந்தபின்பு ஆசை போகுதடி.
ஆள்மாற்றங்கள் நிற்காதடி.
என்ன சொன்னாலும் இன்றைய இளைஞர்களெல்லாமே இருக்கிறார்கள் தம் கண்களை மூடி.

காரணமென்ன?
சரி, தவறுகளைப் பகுத்தறிந்து பார்ப்பதில்லை.
வயதிற்கேற்ப சிந்திப்பதில்லை.

காமம் சபலைத் தூண்டுகிறது இணையம் முதல் சிறு விளம்பரச் சுவரொட்டி வரை.
துப்பிட நினைத்ததுமுண்டு,
அச்சமில்லாமல் கூச்சமில்லாமல் இப்படியும் நடிக்கிறாளே,
அவள் உண்மையில் பெண்மகள் தானா? என்ற கேள்வி எழுகிறது.

நாற்றமெடுக்கும் சமூகமே நாற்றம் போக்க முடிவெடு...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (6-Mar-18, 5:56 pm)
பார்வை : 1686

மேலே