கட்சிகளை உடை
பெற்ற தாயைக் கூட மோசம் செய்வான் வியாபாரமென்று வந்துவிட்டால்.
குறுக்குவழியில் ரொம்ப உயரத்திற்குப் போகலாம் ராஜா.
ஆனால், அங்கேயே நிலைத்து நிற்க உன்னால் முடியாது.
அங்கிருந்து நீ விழுந்தால் உன் எலும்பும் தேறாது.
குடிகாரனின் வாதம் குடியை ஒழிக்க முடியாதென்று மார்தட்டுவதாக உள்ளது.
காரணம், தற்குறி இளைஞர்கள் அவனை தலைவனென்று தலையில் வைத்து ஆடுகிறது.
உண்மையில் அவன் ஒழுக்கம் கெட்டவன்.
இருக்கும் அரசியல் சாக்கடையை சுத்தம் செய்வதாகக் கூறி நாட்டையே சாக்கடையாக்குவான்.
தமிழ் கலாச்சாரம் அவனால் கற்பழிக்கப்படும்.
ஏற்கனவே தரங்கெட்டுவிட்டது.
அவன் அதிகாரம் பெற்றால் மண்ணோடு மண்ணு தான்.
ஆண், பெண் யாரையும் யாரும் கட்டிப்பிடிக்கலாம் என்பான்.
மேடையில் பெண்டீரை முத்தமிட்டு அதுவே கலாச்சாரமென்பான்.
தாய்நாடு என்று பெண்மையைத் தெய்வமாகக் கொண்ட நாடு அவனால் கலங்கமடையும்.
அப்போ அவன் வேண்டாம்.
இவனை நம்பலாமா?
முட்டாள்! முட்டாள்!
அவன் வெளிப்படையாக அரங்கேற்றுபவன்.
இவனோ திரை மறைவில் அரங்கேற்றுபவன்.
உனக்கு தலையிருக்க வெளியில் தலைவனைத் தேடாதே.
பிறருக்குத் தலைவனாகும் உரிமை எவருக்கும் இல்லை.
கூட்டத்தைக் களை.
கட்சிகளை உடை.
தடைகள் நீங்கும்...