இப்பொழுது நாம் செய்து கொண்டிருப்பது

இப்பொழுது நாம் செய்து கொண்டிருப்பது?
பறவைகளின் இருப்பிடங்களை
அழித்து விட்டு
அது வாழ்வதற்கு
மனிதர்களிடம்
கூண்டை விற்கிறோம்
விலங்குகளின் இருப்பிடங்களை
வீழ்த்தி வீடுகளை
கட்டி விட்டு, அது வாழ
சரணாலயம் அமைக்கிறோம்
இயற்கையாய் வெளி
வரும் குழந்தையை கூட
கத்தி வைத்து கிழித்து
பெற்று போடுகிறோம்
விளை நிலங்களை
விறைக்க வைத்து
காண்கிரீட்களை
உறைய வைக்கிறோம்
இயற்கைக்கு மாறான
எல்லாவற்றையும்
“ஹைபிரிட்” செல்லமாய்
சொல்லிவிட்டு
ஏற்றுக்கொள்கிறோம்
எப்படியோ போகட்டும்
சகிப்புடன் சமாதானம்
செய்து கொண்டு
மருத்துவத்தில் வாழ்க்கையை
முடித்துக்கொள்கிறோம்.