பாக்கியலட்சுமி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பாக்கியலட்சுமி |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 13-Apr-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 249 |
புள்ளி | : 27 |
தேடிச் சோறுநிதந் தின்று - பலrnசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்rnவாடித் துன்பமிக உழன்று - பிறர்rnவாடப் பலசெயல்கள் செய்து - நரைrnகூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்rnகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பலrnவேடிக்கை மனிதரைப் போலே - நான்rnவீழ்வே னென்று நினைத் தாயோ?
ஒவ்வொரு விடியலின்
விளிம்பில் வழியனுப்பி நின்று....!
ஒவ்வொரு இரவின்
முடிவில் எதிர்பார்த்து கொண்டு ...!!
வாழ்க்கை பயணத்தின்
கனவுகளை கண்ணெதிரே
நினைவாக்கும் வாய்ப்பாய் நம்பி
நம் உறவுகளை
வழி அனுப்பி
வைக்கிறோம் ..
புதுமை செய்வார்கள்
என்ற எதிர்பார்போடும்
நாளை விடிந்தால்
துன்பங்கள் விலகும்
என்கிற நம்பிக்கையோடும்
காத்து கிடக்குறோம்....
இதுவும் கடந்து போகும் .....
தமிழ் கிறுக்கி ...
இது நான் தான்
காதல் கிறுக்கு
காம கிறுக்கு
பணம் மீது கிறுக்கு
பதவி கிறுக்கு
நிஜமான கிறுக்கு
நடிக்கும் கிறுக்கு
இப்படி பல
கிறுக்குகளை
பார்த்துள்ளேன்
ஏதோ எனக்கு
கொஞ்சம் அதிகமாய்
தமிழ் கிறுக்கு
பிடித்து விட்டது
கவிதைகளையும்
கதைகளையும்
கட்டுரைகளையும்
நாவல்களையும்
கிறுக்கி கிறுக்கி
பார்க்கிறேன்
நான் ஒரு கிறுக்கி.....
தமிழ் படித்து
தமிழ் பேசி
இன்புறுகிறேன்
குணப்படுத்துவது
கடினம் தான் ....!!!
நிஜங்களோடு நிறைய
கனவுகள் சுமந்து
ஓடிக்கொண்டிருக்கிறது மனிதம்
உறக்கத்திற்கு விழிப்பிற்கும்
இடையே ஓட்ட பந்தயம்
நெடுந்தூர ஓட்டத்திற்குக்பின்
கொஞ்சம் உணவு
நிதானமற்ற நிஜங்களாக
மனிதர்கள்
நிலைத்து நிற்பது
சில நிமிடம்
நிலையாடி முன் மட்டும்..!!
முறுக்கி முறுக்கி
ரசிக்கும் மீசையும்
கோதி கோதி
பார்க்கும் கூந்தலும்
திரும்ப திரும்ப
ரசிக்கும் முகமும்
எப்போதும் அழகுதான் ...!!!
அவ்வப்போது
அவசர தீர்மானங்கள்
அரை மணிநேரம்
நடைமுறையில் அவை ...!
உன்மேல் இமயம்போல்
குவிந்து கிடக்கும்
அன்பு ஒருபுறம்
கண்கள் மூடியபடி
அன்பை தேடித்திரியும்
குருடனாய் நீ மறுபுறம்
கேட்கபடாத
இடத்தில்
கொடுக்கப்படுகிற
அன்பிற்கு எப்போதும்
மதிப்பெண் பூஜ்யம் தான்!!!
உன் கைப்பிடித்துப் பழகிய விரல்களுக்கு இன்று வெறுமையின் ரணமாய் ஒற்றைப் பயணம்..!
தந்தைமடி தேடும் உறவாய்.., அன்னை முகத்திற்கு ஏங்கும் உணர்வாய்...
அத்தனை உறவையும் நகலெடுத்துவிட்டு,, இன்று என் அத்தனை உறவும் கலந்த உன்னொருவனை மட்டும் தேடித் தவிக்கும் என் நாழிகைகள்..!
உன்னை எண்ணிய கணங்களின் இரவுநேரக் கண்ணீர் துளிகளை ஒட்டுமொத்த நதிகள் தத்தெடுத்துக் கொண்டன...!
கண்கள் காணும்
காட்சிகளையும்
இதயம் காணும்
கனவுகளையும்
நம்பாமல் திரிந்தேன்!
தனிமையில் இனிமை
கண்டும்
இன்பம் கண்டும்
இயல்பாய் இருந்தேன்!
காதல் விதைத்து
காதல் விதைத்து
கனவு காண சொன்னாய்
கண்கள் இணையும்
இனிமை பழக்கி தந்தாய்!
எறும்பு கடித்தாலும்
வலி என்று
விலகி போகும் என்னை
உன் நினைவை நெஞ்சிலும்
காதலை கையிலும்
சின்னமாய் முத்திரையிட
செய்தாய்!
எல்லாம் தெரிந்தும்
எல்லாம் அறிந்தும்
எல்லாம் புரிந்தும்
புரியாதவளாய் ஏங்குகிறேன் ...!
மரங்களுக்கு இடையில்
காற்றை கிழித்து செல்லும்
வெகுதூர பயணம்
உன்னோடு வேண்டும் என்று ...!
வரம் வேண்டி
தவம் பூண்ட
முனிவரை போல்
கண்கள் மூடியபடி
இதழ்கள் க
நிழலைத் தேடிடும்
நீண்ட பயணம் பாலைவனத்தில்-
வெளிநாட்டு வேலை...!
முடி கோதிடும் விரல்கள்
மடி சாய்ந்திடும் தலை
கணவன் என்ற
போர்வைக்குள் நான்
மனைவி என்ற
தலையணை நீ!
தென்றல் வீசிடும்
நம் காதல்...
ஊசல் கடிகாரம் போல்
ஊசலாடுகிறது மனம்
வலக்கை, இடக்கை விதியும்
விதிவிலக்கானது
இரு கைகள் பின்னியதும்..
சில நேரம்
போரிட நான்
வாதத்திற்கு நீ
வாய்தா ஏற்றது வாதம்
வசந்தம் வந்தது
வாசலில் - இணைந்து
வருடுவோம்...
வருடம் ஓடினாலும்
வயதுகள் ஓடினாலும்
வழித்துணையாக நான்
மாறாது நம் காதல்....
- மூ.முத்துச்செல்வி