சாய நதி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சாய நதி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  01-Aug-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jan-2013
பார்த்தவர்கள்:  294
புள்ளி:  96

என்னைப் பற்றி...

அனைத்தும் கற்பனையே...

என் படைப்புகள்
சாய நதி செய்திகள்
சாய நதி - சாய நதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jul-2016 1:28 pm

தேடி தோண்டினாலும் கிடைக்காத,
புதையல் கிடைத்ததே, உன் புன்னகையில்...
தீயே தீண்டினாலும் கிடைக்காத,
வெப்பம் கிடைத்ததே, உன் நிழலில்...

இறையே வேண்டினாலும் கிட்டாத வரமே... இமை
சிறையே மூடினாலும் கிடைக்கும் உன் முகமே...

உன் இமைகளை குறுக்கி.., இதழ்களை விரித்தாய்...
என் இதயம் நொறுங்க.., ஏனடி சிரித்தாய்...

கரும்புகையே தன் சிகையென விரித்து,
தனியே செல்லும் புகைவண்டிக்கு,
துணையாய் செல்லும்... தட தடவெனும் ஓசை...
அதுபோல்...
என் பயணத்தில் நீ வர.., எனக்கோர் ஆசை...

உன்னருகே நான் உருகிய நிமிடங்கள்,
என்னுள் உறைந்து போனதடி...

மேலும்

நன்றி... 19-Jul-2016 10:15 pm
சிறப்பானாக கவி ! கருத்துக்கள் அருமை ! 17-Jul-2016 10:09 pm
நன்றி 03-Jul-2016 3:26 pm
நன்றி 03-Jul-2016 3:26 pm
சாய நதி - லீலா லோகிசௌமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2020 1:45 pm

🌟💓விலகியே நான்
நின்றாலும்........
வர்ணம் தீட்டப்
பட்ட நிழலாய்
எனை
தொடர்ந்து
வருகிறாய்........ நீ.....!!!🌟💓

மேலும்

தனிமையில்... என் நிழலில் உன் நிறம் தேடி செல்லும்.. கண் பிரிந்த நீர்த்துளிகள்... 29-Jul-2020 11:05 pm
சாய நதி - சாய நதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2020 4:03 am

எனக்கென வருகிறாய் என்றிருந்தேன் நீயோ
தனக்கென பல நண்பர்கள் கொண்டிருந்தாய்
எனக்கென்ன இதனால் என்று செல்லாமல்
உனக்கென துடிக்கும் இதயத்தை என்செய்வேனடி...

என் வானில் நீ மட்டுமே நிலவு
உன் பூமியிலோ நானுமோர் மனிதன்
விண்மீன் கூட்டம் காவலர்களா? காதலர்களா?
என் எண்ண ஓட்டம் எதுவரையோ?

மலராத மொட்டென மாலையில் வருபவளே
உலராத என் விழிகளில் மங்கிவிட்டாய்
தாராள மனம் கொண்டு ஒளிவீச
ஏராளம் ஆனதோ ரசிகர் கூட்டம்

எல்லோருக்குமான உன் அன்பை விட
எனக்கெனவிருக்கும் என் தனிமை மேலானது...
நானுமொருவனாக பகுதி அன்பிற்காக விழித்திருப்பதை விட
நான்ஒருவனாக முழுதனிமையுடன் உறங்குவதே மேலானது. .....

இனி கனவிலும் வராதே நிலவே...

மேலும்

சாய நதி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2020 4:03 am

எனக்கென வருகிறாய் என்றிருந்தேன் நீயோ
தனக்கென பல நண்பர்கள் கொண்டிருந்தாய்
எனக்கென்ன இதனால் என்று செல்லாமல்
உனக்கென துடிக்கும் இதயத்தை என்செய்வேனடி...

என் வானில் நீ மட்டுமே நிலவு
உன் பூமியிலோ நானுமோர் மனிதன்
விண்மீன் கூட்டம் காவலர்களா? காதலர்களா?
என் எண்ண ஓட்டம் எதுவரையோ?

மலராத மொட்டென மாலையில் வருபவளே
உலராத என் விழிகளில் மங்கிவிட்டாய்
தாராள மனம் கொண்டு ஒளிவீச
ஏராளம் ஆனதோ ரசிகர் கூட்டம்

எல்லோருக்குமான உன் அன்பை விட
எனக்கெனவிருக்கும் என் தனிமை மேலானது...
நானுமொருவனாக பகுதி அன்பிற்காக விழித்திருப்பதை விட
நான்ஒருவனாக முழுதனிமையுடன் உறங்குவதே மேலானது. .....

இனி கனவிலும் வராதே நிலவே...

மேலும்

சாய நதி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2019 12:21 am

கண் இமையின் ஓரம்...
உருண்டொழுகும் ஈரம்...
உண்மையில் பெரும் பாரம்...
உவமையாகும் கடல் நீரும்...

உண்டான இடைவெளியின் உள்ளே...
துண்டான இதயங்கள் கண்டேன்...
எண்ணங்கள் இரண்டும் ஒன்றாயினும்...
வண்ணங்கள் ஏனோ மங்கியது...

என் இதழ் உதிர்த்த வார்த்தைகள் சில,
இன்னும் உன் செவி சென்று சேரவில்லை...
என்றும் நானுன்னை பழித்ததில்லை...
இன்று போல் என் கண்கள் விழித்ததில்லை...

வழித்துணை எனவே நான் இங்கு வந்தேன்...
மொழி தெரியாத எண்ணங்கள் சில..
உன் களைப்பாற்ற வந்து களைப்புற்றன...
உன் சொற்கள் இளைப்பாறும் நேரம்... இளைத்து போகிறேன்...

இலக்கணம் மீறினேன்...
உவமை தொலைத்தேன்...
எதுகை மோனை சேரவில்லை...

மேலும்

சாய நதி - சாய நதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2019 9:25 pm

நீளமான இரவு...
நெடுந்தூர கற்பனை...
தொடுந்தூர தனிமை...

அதிகாலை அமைதி...
அசைந்தோடும் பாடல்...
அழியாத தேடல்...

இவை அனைத்தையும் நான் நேசித்துக்கொண்டிருக்க...
அவையோ இப்போது உன்னை நேசிக்க தொடங்கிவிட்டன...

உரையாடி கழிந்த நேரங்களின் இடையே...
ஊமையாக கிடக்கும் சில நிமிடங்களும்...
உன்னுடன் உரையாட தொடங்கிவிட்டன இன்று...
உன் அனுமதி இன்றி...

மேலும்

நன்றி 30-Jan-2019 10:17 pm
அருமை அதிலும் இறுதி நான்கு வரிகள் 30-Jan-2019 9:30 pm
சாய நதி - சாய நதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2019 9:25 pm

நீளமான இரவு...
நெடுந்தூர கற்பனை...
தொடுந்தூர தனிமை...

அதிகாலை அமைதி...
அசைந்தோடும் பாடல்...
அழியாத தேடல்...

இவை அனைத்தையும் நான் நேசித்துக்கொண்டிருக்க...
அவையோ இப்போது உன்னை நேசிக்க தொடங்கிவிட்டன...

உரையாடி கழிந்த நேரங்களின் இடையே...
ஊமையாக கிடக்கும் சில நிமிடங்களும்...
உன்னுடன் உரையாட தொடங்கிவிட்டன இன்று...
உன் அனுமதி இன்றி...

மேலும்

நன்றி 30-Jan-2019 10:17 pm
அருமை அதிலும் இறுதி நான்கு வரிகள் 30-Jan-2019 9:30 pm
சாய நதி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2019 9:25 pm

நீளமான இரவு...
நெடுந்தூர கற்பனை...
தொடுந்தூர தனிமை...

அதிகாலை அமைதி...
அசைந்தோடும் பாடல்...
அழியாத தேடல்...

இவை அனைத்தையும் நான் நேசித்துக்கொண்டிருக்க...
அவையோ இப்போது உன்னை நேசிக்க தொடங்கிவிட்டன...

உரையாடி கழிந்த நேரங்களின் இடையே...
ஊமையாக கிடக்கும் சில நிமிடங்களும்...
உன்னுடன் உரையாட தொடங்கிவிட்டன இன்று...
உன் அனுமதி இன்றி...

மேலும்

நன்றி 30-Jan-2019 10:17 pm
அருமை அதிலும் இறுதி நான்கு வரிகள் 30-Jan-2019 9:30 pm
சாய நதி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Apr-2018 1:03 am

பன்னிரண்டு மணிவரை
என்னிரண்டு‌ விழிகளில்..,
வெண்ணிலவு தெரியுதே...

விண்ணளவு தொலைவிலும்
கண்ணிமையின் வளைவினில்,
உன்னினைவு தொடருதே...

எள்ளளவு இடைவெளியில்
சொல்லளவு குறைந்ததால்,
களி களவு போனதே...

நான்கறை உறுப்பும்
சில்லறை உணர்வும்,
வைகறை நெருப்பாகுதே...

மேலும்

இருதயம் 11-Apr-2018 9:00 pm
மாறுபட்ட சிந்தனையில் பிளவுகளை உணர்த்தும் படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Apr-2018 12:51 pm
நான்கரை உறுப்பு என்றால் 11-Apr-2018 10:41 am
சாய நதி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2018 1:03 am

பன்னிரண்டு மணிவரை
என்னிரண்டு‌ விழிகளில்..,
வெண்ணிலவு தெரியுதே...

விண்ணளவு தொலைவிலும்
கண்ணிமையின் வளைவினில்,
உன்னினைவு தொடருதே...

எள்ளளவு இடைவெளியில்
சொல்லளவு குறைந்ததால்,
களி களவு போனதே...

நான்கறை உறுப்பும்
சில்லறை உணர்வும்,
வைகறை நெருப்பாகுதே...

மேலும்

இருதயம் 11-Apr-2018 9:00 pm
மாறுபட்ட சிந்தனையில் பிளவுகளை உணர்த்தும் படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Apr-2018 12:51 pm
நான்கரை உறுப்பு என்றால் 11-Apr-2018 10:41 am
சாய நதி - சாய நதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2017 4:42 pm

அழிக்க முடியாத தடயங்களை எடுத்துக்காெண்டு,
நிறுத்த முடியாத நேரங்களாேடு தப்பியாேடுகிறேன்...

விழித்ததும் அழும் மழலையென கண்ணீர்...
விழிகளில் ததும்பியெழ, காரணம் யாராே..?

கட்டவிழ்ந்த கன்றென துள்ளி எழுந்து,
விட்டாெழிந்த நாெடிகளை தேடும் மனமாே..?

சென்றுவர முடியாத தூரங்கள்...
இன்றுவரை இல்லாத ஈரங்கள்.., இமையாேடு...

மேலும்

நன்றி... 25-Apr-2017 10:59 pm
ஆஹா !...அருமை ! அழகான கருத்துமிகு கவிதை. வாழ்த்துக்கள் 25-Apr-2017 7:49 pm
சாய நதி - சாய நதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2015 10:37 am

இயற்பியலும் வேதியியலும் உயிரியலுக்காகதான்...
கணிதமும், கணிப்பொறியும், மனிதனுக்கு பணிபுரியதான்...
மொழியும், புலமையும் உரையாடல் வளமைக்காகதான்...

இங்கே சந்தேகம் எழுந்துவிட்டதே...
இன்பத்தை உருவாக்குவதா? இல்லை...
இன்பத்தை பிறரிடமிருந்து பறித்துக்கொடுப்பதா??
எது கல்வி???

பலநூறு வருட அனுபவங்களை,
சில பக்கங்களில் பகிர்ந்துவிடும்... வரலாறு...

உண்டுறங்கி கழிக்கும் நேரங்களினூடே...
உடலுக்கு ஊக்கமளிக்கும்... விளையாட்டு...

நண்டுறங்கும், வளைகளாய்...
பல்லாண்டு மர கிளைகளாய்...
பல்லவர்களின் சிலைகளாய்...
மனதை தோண்டி படர்ந்து உறைந்திருக்கும்,
உள்ளுணர்வுகளை வெளிக்கொணரும்... கலை...

இவையெல்

மேலும்

நன்றி 04-Nov-2015 10:38 pm
அடடா.... அற்புதமான வரிகள் !! நேர்த்தியான கருத்து !! கருத்தை எழுத்தில் கொண்டுவந்த விதம் அபாரம் !! வாழ்த்துக்கள் !! 31-Oct-2015 11:21 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (34)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மதி

மதி

kodungaiyur

இவர் பின்தொடர்பவர்கள் (34)

இவரை பின்தொடர்பவர்கள் (34)

myimamdeen

myimamdeen

இலங்கை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

ரகு R

Erode

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே