முன்னிரவு காதலன்
எனக்கென வருகிறாய் என்றிருந்தேன் நீயோ
தனக்கென பல நண்பர்கள் கொண்டிருந்தாய்
எனக்கென்ன இதனால் என்று செல்லாமல்
உனக்கென துடிக்கும் இதயத்தை என்செய்வேனடி...
என் வானில் நீ மட்டுமே நிலவு
உன் பூமியிலோ நானுமோர் மனிதன்
விண்மீன் கூட்டம் காவலர்களா? காதலர்களா?
என் எண்ண ஓட்டம் எதுவரையோ?
மலராத மொட்டென மாலையில் வருபவளே
உலராத என் விழிகளில் மங்கிவிட்டாய்
தாராள மனம் கொண்டு ஒளிவீச
ஏராளம் ஆனதோ ரசிகர் கூட்டம்
எல்லோருக்குமான உன் அன்பை விட
எனக்கெனவிருக்கும் என் தனிமை மேலானது...
நானுமொருவனாக பகுதி அன்பிற்காக விழித்திருப்பதை விட
நான்ஒருவனாக முழுதனிமையுடன் உறங்குவதே மேலானது. .....
இனி கனவிலும் வராதே நிலவே...
- முன்னிரவு காதலன்