வழுவமைதி

கண் இமையின் ஓரம்...
உருண்டொழுகும் ஈரம்...
உண்மையில் பெரும் பாரம்...
உவமையாகும் கடல் நீரும்...

உண்டான இடைவெளியின் உள்ளே...
துண்டான இதயங்கள் கண்டேன்...
எண்ணங்கள் இரண்டும் ஒன்றாயினும்...
வண்ணங்கள் ஏனோ மங்கியது...

என் இதழ் உதிர்த்த வார்த்தைகள் சில,
இன்னும் உன் செவி சென்று சேரவில்லை...
என்றும் நானுன்னை பழித்ததில்லை...
இன்று போல் என் கண்கள் விழித்ததில்லை...

வழித்துணை எனவே நான் இங்கு வந்தேன்...
மொழி தெரியாத எண்ணங்கள் சில..
உன் களைப்பாற்ற வந்து களைப்புற்றன...
உன் சொற்கள் இளைப்பாறும் நேரம்... இளைத்து போகிறேன்...

இலக்கணம் மீறினேன்...
உவமை தொலைத்தேன்...
எதுகை மோனை சேரவில்லை...
சொற்பமானது கற்பனைகள்...
உன்னை எழுதும் போது...

எழுதியவர் : (2-Mar-19, 12:21 am)
சேர்த்தது : சாய நதி
பார்வை : 88

மேலே