மாறுவானா
வானில் பறக்கும்
வகை வகையான
பறவைகளின்
கூட்டம் அதிகமாயிருந்தாலும்,
கூடுதல் வேகமாய்ப் பறந்தாலும்,
அவை
மோதிக்கொள்வதில்லை
தங்களுக்குள்..
விதிகள் ஆயிரம்
வகுத்தாலும்,
மீறி
வீதியில் மோதியும்
சண்டையிட்டும்
சாகும் மனிதன்,
மாறுவானா இதைப்பார்த்து...!

