செண்பக ஜெகதீசன் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : செண்பக ஜெகதீசன் |
இடம் | : விஜயநகரி(கன்னியாகுமரி) |
பிறந்த தேதி | : 28-Oct-1948 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 6744 |
புள்ளி | : 7256 |
அரசு அதிகாரி(பணி ஓய்வு), தற்போது- அறநிலையப் பணிகள்,ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்...Face book:-rnhttps://www.facebook.com/jagatheesa.perumal.3
நீர்த்தேக்கம் திறப்பு,
கரை புரண்டு ஓடுகிறது-
உழவர்களின் மகிழ்ச்சி...!
பள்ளிப் படிப்பு மறந்து போனது,
பிள்ளைகள் பணியெலாம் தொடுதிரை ஆனது..
எப்போது முடியுமோ நீண்ட விடுமுறை,
எல்லாம் முன்போல் ஆகவே ஆசை...!
பெறுகின்றார்கள் புகழ்,
பெருகுகிறது அளவில்லாமல்-
மற்றவர்களின் பொறாமை...!
வேடிக்கை மனிதர்கள்-
இவர்கள்
இருட்டில்
பார்க்காத ஜாதியை
வெளிச்சத்தில் பார்த்து
பாகுபட்டு
வேகப்பட்டு
வெட்டிச் சாகின்றனரே..
வெளிச்சத்துக்கு வரட்டும்
வேஷங்கள்,
வெளிச்சத்திலும் வந்திடும்
ஜாதிமத நல்லிணக்கம்...!
உயிரைக் காக்கும்
மருத்துவர் செவிலியரோடு,
தூய்மைப் பணியாளர்
துணிச்சலாய்ப் படைவீரர்,
உதவிடும் காவலரெலாம்
உறுதுணை தெய்வங்களே...!
மழைக்குப்பின் விவசாயம்,
மிக வேகமாய் நடைபெறுகிறது-
அடகு வியாபாரம்...!
இனிய காதலில்
இணைந்தனர் மணவாழ்வில்,
பிரிந்திட இப்போது
போய்நிற்கிறார்கள் நீதிமன்றத்தில்...!
அருவி நீரது குளித்திட மட்டுமே
அதிலே குதித்தால் அபாயம் உயிர்க்கே,
பெருமை மிக்கது சாதனை செய்தல்
பெரிதாம் இழப்பு சிறிய தவறிலே..
அச்சம் இலாமை அனைத்திலும் நன்றே
அசட்டுத் தைரியம் அழிப்பாய் இன்றே,
துச்ச மாக எதையும் எணாமல்
துணிந்து தெளிந்து செயல்படு நீயே...!
முற்றத்து முருங்கையில்
காய்
முற்றிவிட்டதால்,
உற்ற கவலை உனக்கு..
உற்றுப்பார் சற்றே,
உள்ளேயும் அப்படித்தான்-
பார் பாவையை...!
மழைநீரில் தார்ச்சாலை,
தெளிவாய்த் தெரிந்தன-
ஊழல் வட்டங்கள்...!