கவிபாரதி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிபாரதி |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 25-Jan-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 11-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 1236 |
புள்ளி | : 425 |
நான் தமிழை தாயை போன்று நேசிக்கிறேன்..!
கவி ஆர்வத்தை அதிகமாய்
என்னுள் சேகரிக்கிறேன்..!!
நான் எண்ணங்களுக்கு
உயிர் கொடுக்க நினைப்பவள்...!!
கவிதை எழுத
மிகவும் ஆசை
படுவேன்.. ஆனால்
கவிதை எனக்கு
தூரமாகவே தெரிகிறது..
இருந்தும் எழுதுவேன்
அந்த கவிதை
உரைநடை போல்
வந்தாலும்
பெருமையாக நினைப்பேன்..!
கவிதைகளை கிறுக்கல் என்று சொல்லும் கருத்தினை
அதிகமாக வெறுப்பவள்..!!
உயிருக்கு அதிகமாக மதிப்பு கொடுப்பவள்...!!
என் கண்ணெதிரே தண்ணீருக்குள் சிறு எறும்பு தத்தளித்தாலும் அதை எப்படியாவது கரையில் எடுத்து விட்டுவிட்டு ஓர் உயிரை காப்பாற்றினேன் என்று மனதிற்குள் சிறுபிள்ளை போல் மகிழ்பவள்...!!
நமக்கு இன்னல்
செய்யா உயிர்களை துன்புறுத்த கூடாது என்ற கொள்கை உடையவள்..!!
பிறரின் வலிகளை என் வலிகளாக நினைத்து ரணமாகி போபவள்..!
எந்த கருத்துக்களையும் இழப்புக்களின்
பக்கமிருந்து பார்ப்பவள்..!
உண்மைக்காக கடவுளிடமும் வாதிட விரும்புபவள்..!
யார் சொல்லியும் பொய்யினை நிஜம்
என்று ஏற்க மறுப்பவள்..!
கடவுள் மீது நம்பிக்கை அதிகம் கொண்டவள்...
சடங்குகள்,சம்பிர்தாயங்கள் அறிவியலோடு ஒத்துபோகும் நடைமுறைகள் என்பவள்..
ஆண்களும் பெண்களும் சமம் என்று நினைப்பவள்..!
மொத்தத்தில் நான் அனுபவத்தில் எதையும் கற்க
ஆசைப்படுபவள்...!!
நல்ல உணர்வுகளுக்கு
மதிப்பு கொடுக்க விரும்புகிறேன்..!
கவிதை சிறப்பாய் வரும் அளவிற்கு முயற்சிக்கப்போகிறேன்..!!
முடிந்தளவு வழிகாட்டுங்கள்..
முன்னேறி செல்கிறேன் தமிழை தலைவணங்கி..!!
முயற்சியால் தடம் பதித்து..!
.மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானம்..!
1975 ம் ஆண்டு இந்தியா -மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் விளையாடிய டெஸ்ட் போட்டிதான் இந்த மைதானத்தில் விளையாடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டி.../ ஆடப்பட்ட முதல் போட்டியில்201 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்விப்பெற்ற இந்திய அணிதான் பின்னாளில் வலிமைமிக்க மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று ஒருநாள் கிரிக்கெட்டிற்கான உலககோப்பையை கைப்பற்றியது. அதிலிருந்துதான் இந்திய தேசத்தில் ஒரு பைத்தியமான மனநிலை இந்திய மக்களிடம் பரவியது. கிரிக்கெட் வீரர்கள் ஹீரோக்கள் ஆனார்கள்... அவர்கள் சொல்வதே மந்திரம் என்றும் கருதினார்கள்.
இத்தகைய மூடநம்பிக்கை மக்களிடம் ப
விடியலூர் ஆரம்பப்பள்ளியில் மாலையில் இறுதிமணி ஒலிக்கிறது... காணிராசு வாடா வீட்டில பைய போட்டுட்டு வேகமா போகணும். நில்லுடா பச்சமுத்து புத்தகத்த எடுத்துகிட்டு வாறேன்..சரிடா வா வா.
பச்ச டேய் நேத்தைக்கு எடுத்த இரும்பு,பிளாஸ்டிக் எவ்வளவுதான் போச்சுடா..?அதுவா 10 ருபா கிடச்சிதுடா.. காணி உனக்கு எவ்வளவு கிடச்சிது...? நான் எடைக்கு போடலடா தங்கச்சி நோட்டு வாங்கி கேட்டிச்சி அதான் இன்னைக்கு கிடைக்கிறதையும் சேர்த்துப்போட்டு அவளுக்கு நோட்டு வாங்கி கொடுக்கணும்.
ஆமடா காணி நாமெல்லாம் எப்படியாச்சும் 12 வகுப்ப தாண்டிரனும்டா..நம்ம அப்பன்,ஆத்தா பார்க்குற இந்த குப்பைய கிளருற பொழப்பு நமக்கு வேணாம்டா.. சரியா சொன்ன பச
விடியலூர் ஆரம்பப்பள்ளியில் மாலையில் இறுதிமணி ஒலிக்கிறது... காணிராசு வாடா வீட்டில பைய போட்டுட்டு வேகமா போகணும். நில்லுடா பச்சமுத்து புத்தகத்த எடுத்துகிட்டு வாறேன்..சரிடா வா வா.
பச்ச டேய் நேத்தைக்கு எடுத்த இரும்பு,பிளாஸ்டிக் எவ்வளவுதான் போச்சுடா..?அதுவா 10 ருபா கிடச்சிதுடா.. காணி உனக்கு எவ்வளவு கிடச்சிது...? நான் எடைக்கு போடலடா தங்கச்சி நோட்டு வாங்கி கேட்டிச்சி அதான் இன்னைக்கு கிடைக்கிறதையும் சேர்த்துப்போட்டு அவளுக்கு நோட்டு வாங்கி கொடுக்கணும்.
ஆமடா காணி நாமெல்லாம் எப்படியாச்சும் 12 வகுப்ப தாண்டிரனும்டா..நம்ம அப்பன்,ஆத்தா பார்க்குற இந்த குப்பைய கிளருற பொழப்பு நமக்கு வேணாம்டா.. சரியா சொன்ன பச
அவலம் காணுமிடம் கவிதை வரமறுத்து...
என்னில் கண்ணீர் மட்டும் பழமையை
ருசித்து கசந்து விடையாகிறது ...
அங்கே ஆலமர விழுதுகள்
தூளி ஆடிட சிறார்கள் இன்றி
மண்ணில் விழுந்து விம்மி அழுகிறது..
மாமர காய்களெல்லாம்
களவுக்கொள்ள விடலைகள் இன்றி
வாடிகுதித்து தற்கொலை செய்கிறது...
ஓங்கிய பனைமர நுங்குகளை
வண்டி உருட்டிட சிறுவர்கள் இன்றி
மண்ணில் புதைந்து மறுபிறவி தேடுகிறது...
காளையர் வியர்வையில் குளித்திட ஏங்கும்
இளவட்ட கல்கள் மாடுகள் பெய்திட
கட்டுதறியாகி கண்ணீர் விடுகிறது...
திண்ணைகள் இல்லா வீடுகள் எல் (...)
நஞ்சை புஞ்சை விற்றெடுத்த
நட்டு நகை அடகு வைத்து
பூர்வீக வீடு உடைத்து
நகரத்திலே வசதி என்று
கோடியிலே வீடு கட்டி
குருதி வற்றும் நாள்வரையில்
சொர்க்கம் உணரும் மாந்தர்களே..
பாசநேசம் பறிகொடுத்து
பாதியிலே நோய்பிடித்து
இன்பம் பறிக்கும் இறுதி நாள்வரவே
வாழ்ந்த வாழ்க்கை நரகம் என்று உணர்வீரோ..??
செல்வம் என்று கோடி சேர்க்க ஓடிடும் என்னினமே
பிறந்த மண்ணை விட்டு சென்றாலும் விற்றுவிடாதே..
தள்ளாடி தடிபிடிக்கும் நாள்வரவே தஞ்சம்புக
தாய்மடி போல் அரவணைக்கும் இடம்வேண்டும்..
ஆறடி மண்ணின் அருமை உணராத மா (...)
முகம் காட்டுமிடம்
அழகாம்
பேசுமிடம்
இனிமையாம்
எழுதினால்
கவிதையாம்..
இவை சுமக்கும்
பொய்களை நம்பும் மக்கள் ஏனோ
உண்மையை காணுமிடம் மட்டும்
பைத்தியக்காரத்தனம் என்கிறார்கள்??
உணர்வுகள் கசந்து போகும் எண்ணம் வேண்டாம்
எனக்காய் இசைந்து பேசும் கூட்டம் வேண்டாம்
சீற்றம் மறைத்து சிறுத்து ஒளிரும்
சிமிழி நெருப்பு நான்...
மாற்றம் தேடி காட்டு தீயாய்
உருமாறி பதர் எரிக்கும் நாளும் வரும்...
ஊர் அடித்து உலையில் போடும் ஆளும் நானில்லை
உணர்வு கொன்று உறங்கி கிடக்க பிணமும் நானில்லை..
...கவிபாரதி...
அழியா நினைவுகள்
``````````` ```````````````````
நிமிடங்களை துரத்திவிட்டு
பார்வைக்காக காத்திருப்பதும்..
சந்தித்த பொழுதின்
நொடிகளை தக்கவைப்பதுமாய்...
காலத்தோடு மன்றாடிய தருணங்கள்...!
பசியை மறந்துவிட்டு
நினைவுகளை ருசித்தும்...
பகிர்ந்திடும் வார்த்தைகளுக்கு
அழகழகாய் பொலிவு கூட்டியும்...
மனம் மகிழ்ந்த நாட்களது...!
வலியிலும் புன்னகை திருடி
முகம் மீது அலங்கரித்து...
மனம் ஈர்த்த பூவிதழ் சிரிப்பில்
ரணங்களையும் மறந்த காலமது...!
கை கோர்த்து நடந்தே
புது உலகம் கண்டும்...
நட்பாய் தோள் சாய்ந்தே
புரிதல்கள் உணர பழகிய பருவமது..!
உனக்காக நானும் எனக்காக நீயும்
மனதோடு மனதாக...
உயிர்கொண்
வெள்ளை உள்ளப் பிள்ளையாய்
எல்லையற்ற அன்புப் புதல்வனாய்
கற்பனை உண்ட புலவனாய்
வந்தனம் சொல்லி வந்துள்ளேன்..
அன்னையே..! தமிழே..! செந்தமிழே.!
கொள்ளைச் சுவையுடைய கொம்புத்தேனே..!
விற்பனையாகாத நாகரிக கம்பன்
நான் ஒர் அனுமதிக்கேட்டு வந்துள்ளேன்.
செரிந்தநீல நீர்ச்சேலையுடுத்திய ஆழியலைகள்
திரிபுறமும் உன் தேன்கவிகள் பாடினாலும்,.
விரித்த கார்க்கூந்தலோடு நவீன கண்ணகிகள்
வீதிவீதியாய் சிலம்பெனும் கற்புத்தொலைத்து
நீதிமன்றவாசலில் நீதிக்கேட்டு தொலையட்டும்
எனக்கு கவலையே இல்லை தாயே.....!
கவனிக்கப்படாத நாகரிக பாரதி
நான் ஓர் அனுமதிக்கேட்டு வந்துள்ளேன்.
பொன்வட்ட வான்வெண்ணிலா ஒளிக்காலால், உன்
மொட்டை
நான் எப்படியோ உனக்குள்...
ஆனால் எப்போதும் எனக்குள் நீ...
புதிய தோழமைகள் தளத்தில் நிறைய படைப்புகளை பதிகின்றனர்.
ஆனால் அவர்களது படைப்புகளுக்கு கருத்தும் தேர்வும் மிக குறைவாக கிடைப்பதால் தளத்தை விட்டு பறந்துவிடுகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தி கருத்துக்களையும் தேர்வு புள்ளிகளையும் வாரி வழங்குமாறு எனது நட்புகளிடம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்....!
இந்த படைப்பிற்கு கருத்தளிப்பதைவிட
மற்றத் தோழமைகளின் படைப்புகளுக்கு
கருத்தளிக்க புறப்படலாமே......
ஏன்.... இன்னும் இங்கேயே நிக்கிறீங்க....
கிளம்புங்க......
நன்றி நன்றி நன்றி
அன்புடன்
நாகூர் கவி.
என்னுடைய போட்டி நிலவரம்
தெரிந்து
கொள்ள விரும்புகிறேன்.
பணியின் சுமையால்
உதவி கேட்கிறேன்.
பரிசு அனுப்பும்
முறையையும்
அறிய விரும்புகிறேன்.
பரிசிற்கு உரிய தோழர்களை
யாரென்று 123 ஒழுங்கில்
தரமுடியுமா..?