எனதான உன் காதல்

அழியா நினைவுகள்
``````````` ```````````````````
நிமிடங்களை துரத்திவிட்டு
பார்வைக்காக காத்திருப்பதும்..
சந்தித்த பொழுதின்
நொடிகளை தக்கவைப்பதுமாய்...
காலத்தோடு மன்றாடிய தருணங்கள்...!
பசியை மறந்துவிட்டு
நினைவுகளை ருசித்தும்...
பகிர்ந்திடும் வார்த்தைகளுக்கு
அழகழகாய் பொலிவு கூட்டியும்...
மனம் மகிழ்ந்த நாட்களது...!
வலியிலும் புன்னகை திருடி
முகம் மீது அலங்கரித்து...
மனம் ஈர்த்த பூவிதழ் சிரிப்பில்
ரணங்களையும் மறந்த காலமது...!
கை கோர்த்து நடந்தே
புது உலகம் கண்டும்...
நட்பாய் தோள் சாய்ந்தே
புரிதல்கள் உணர பழகிய பருவமது..!
உனக்காக நானும் எனக்காக நீயும்
மனதோடு மனதாக...
உயிர்கொண்டு பரிசமிட்டு
உறவான பொற்காலம் அது..!!!


...கவிபாரதி...

எழுதியவர் : கவிபாரதி (14-Feb-15, 1:03 am)
பார்வை : 121

மேலே