காதலர் தினம் - ப்ரியன்
![](https://eluthu.com/images/loading.gif)
வானில்
கலைந்து திரியும்
வெண்மேக கூட்ட வடிவில் ♥
குளியலறையில்
உடைந்து உதிரும்
கூந்தல் முடியின் வடிவில் ♥
வீட்டுசுவரில்
உரிந்து விழுந்த
சிமெண்ட் சிதறல் வடிவில் ♥
சாலையில்
வௌ்ள அரிப்பால்
பள்ளமான தரையின் வடிவில் ♥
வரைபடத்தில்
தவறை திருத்தி
இடும் ரிவிஷன்கிளவுட் வடிவில் ♥
இப்படி
நீயின்றியும் காதல் "♥" குறியால்
தினம் உன் நினைவை தூண்டிடும்
நாளும் நமக்கு காதலர் தினமே...