கனவு மெய்ப்படட்டும்

விடியலூர் ஆரம்பப்பள்ளியில் மாலையில் இறுதிமணி ஒலிக்கிறது... காணிராசு வாடா வீட்டில பைய போட்டுட்டு வேகமா போகணும். நில்லுடா பச்சமுத்து புத்தகத்த எடுத்துகிட்டு வாறேன்..சரிடா வா வா.
பச்ச டேய் நேத்தைக்கு எடுத்த இரும்பு,பிளாஸ்டிக் எவ்வளவுதான் போச்சுடா..?அதுவா 10 ருபா கிடச்சிதுடா.. காணி உனக்கு எவ்வளவு கிடச்சிது...? நான் எடைக்கு போடலடா தங்கச்சி நோட்டு வாங்கி கேட்டிச்சி அதான் இன்னைக்கு கிடைக்கிறதையும் சேர்த்துப்போட்டு அவளுக்கு நோட்டு வாங்கி கொடுக்கணும்.
ஆமடா காணி நாமெல்லாம் எப்படியாச்சும் 12 வகுப்ப தாண்டிரனும்டா..நம்ம அப்பன்,ஆத்தா பார்க்குற இந்த குப்பைய கிளருற பொழப்பு நமக்கு வேணாம்டா.. சரியா சொன்ன பச்ச நானும் அப்படி தான் நினைக்கிறேன்..சரிடா நீ நேத்தைக்கு 10 ருபாயை என்ன பண்ணின..? அதுவாடா ஈஈ......... என்னடா..? இழிக்கிற. இல்லடா காணி அதுக்கு வாசனை சோப்பு வாங்கிட்டேன்டா..!
எதுக்குடா அத வாங்கின நான் நினச்சேன் நீ சொன்ன மாதிரி எழுதுறதுக்கு பேனாவை வாங்கியிருப்பனு.. இல்ல காணி எனக்கும் பேனா வேணும்தான். ஆனா நேத்து வகுப்புல என்னைய அழுக்குமூட்ட குளிச்சியடா நாறித்தொலையுதுனு கோக்கிலா டீச்சரு திட்டினத நீ பார்க்கலியாடா..? பார்த்துட்டு தாண்டா இருந்தேன். அதுக்கு ஏண்டா நீ படிக்க தேவையானத விட்டுட்டு சோப்ப வாங்கின,,..? டீச்சரு கேட்டப்பவே சொல்லவேண்டியது தானடா நீங்க சேர்க்குற குப்பைங்க தான் எங்கள நாறடிக்குதுன்னு..
காணி என்னடா சொல்லற..? அப்புறம் என்னடா அந்த கோக்கிலா டீச்சரு மீனு வாங்க 5 கிலோமீட்டர் பைக்கில சிரிச்சுகிட்டே போறாக..இந்தா 2கிலோமீட்டர் தூரத்தத்துல இருக்கிற இந்த குப்பகிடங்குல சிரமத்த பார்க்காம குப்பைய போடலாமில்ல.. போதாததுக்கு 2 நாள் நாறவச்சி தெருவுல நம்ம அப்பனாத்தா அள்ளுற மாதிரி தான் போடுவாகளாம்..அதுவும் பிணனாத்தம் நாறுதுன்னு அப்பா சொல்றாரு.. விடுடா காணி அவுக எல்லாம் வசதி படைச்சவுக.. நாம சோத்துக்கு அலையுறோம்..!
பச்ச நீ யோசிச்சு பாருடா அவுகஎல்லாம் வீட்ட சுத்தி நாத்தம் பண்றாங்க.. நம்ம அப்பனாத்தா அதையெல்லாம் சுத்தம் பண்றாங்க. ஊர நாறடிச்சிட்டு உடலுக்கு செண்டு பூசுற அவுகளுக்கு இறக்குற மரியாதை.. நாதத்தையே மோந்துகிட்டு ஊரை வாசாமாக்குற நம்ம அப்பனாத்தாவுக்கு இல்லடா.. உண்மை தாண்டா காணி ஆனா நாம நினச்சி என்னாடா ஆகப்போகுது..?
பச்ச டேய்... ஏண்டா முடியாது நாம மாத்தி காட்டுவோம்டா.. முதல்ல நல்லா படிப்போம் நல்ல வேலைக்கு வருவோம் நம்மள சுத்தி எப்போதும் சுத்தமாக வைப்போம்.. உடல் வலிக்காம இருந்தவுகஎல்லாம் நாத்தம் தாங்காம அவுகளே அவுகள சுத்தி சுத்தம் பண்ணிருவாங்க..என்னடா யோசிக்கிற நான் சொல்றது சரிதானே..சரிதாண்டா காணி எனக்குள்ளையும் ஒரு கனவு இருக்குடா.. என்னடா கனவு ..?
டேய் காணி குப்பைகளை சுத்தம்பன்றதுக்குன்னு நம்ம அப்பனாத்தக்களை அள்ளி போட்டிருக்கும் அரசாங்கம் இந்த மக்களுக்கு குப்பைகளை எங்க எப்படி போடணும்னு கத்துகொடுத்திருந்த எப்படி இருக்கு..ம்ம் நம்ம வயத்துக்கு இப்போ கிடைக்கிற கஞ்சியையும் கிடைக்காம போயிருக்கும். ஏண்டா.....? அப்புறம் என்னடா பச்ச அவுக எல்லோரும் குப்பைகளை அவுகளே சுத்தம்பண்ணி குப்பைகிடங்கில் போட்டால்..துப்புரவு தொழிலாளிகளே இருக்கமாட்டாங்களேடா.. அப்புறம் எப்படி நம்ம அப்பனாத்தவுக்கு வேலையிருக்கும் நாமளும் சாப்புடுறது..???
காணி ஏண்டா அப்படி நினைக்கிற....! அப்துல் காலமே சொல்லியிருக்கார் கனவு காணுங்கள்..!! என்று நாமளும் கனவு காணுவோம் கொஞ்சம் உயர்ந்த கனவுகளாக..! அதில ஒன்னும் தப்பில்லையே... தப்பில்லடா பச்ச ஆனா நீ என்ன தான் சொல்ல வாற..?? சொல்லுறேன் கேளு....! நம்ம அரசாங்கம் மக்கள்கிட்ட குப்பைகளை தெருவில் வீசக்கூடாதுன்னு கண்டிப்பான சட்டம் கொண்டுவரணும்..அப்புறமா அவரவர் வீட்டு குப்பைகளை அவரவரே அரசு வீதிவீதியாக நிறுத்தியிருக்கும் தானியங்கி குப்பைவண்டியில் கொட்டவேண்டும் கூடவே அதை யாராச்சும் மீறீனால் அவங்களுக்கு அதிகபடியான தண்டனைகள் விதிக்கணும்.. அடுத்தபடியா........................!!! நல்லா கேளுடா நல்லா கேளு..சொல்லுடா பச்ச..!
மக்கள் எல்லோரும் அரசாங்கம் விதித்த சுற்றுப்புற சுத்தம் என்ற சட்டத்தினை தவறாமல் கடைபிடிக்கிறார்களா என்று கவனிப்பதற்காக நம்ம அப்பனாத்தாகளுக்கு துப்புரவு காவலாளிகள் என்று வேலை கொடுக்கணும்.. அப்படினா நாமளும் நாறமாட்டோம்.. நாம பாக்குற தொழிலும் காவலர் பிரிவில் சேர்ந்திடும் எப்புடீ.....!!! டேய் பச்ச எப்புடிடா இப்படியெல்லாம் யோசிக்கிற..?? காணி டேய் நாமெல்லாம் படிக்கிறோமில்லடா இப்படி தான் நாமளா யோசிக்கணும்... இல்ல நம்மள வச்சே சில கூட்டங்க பொழப்ப பார்த்திருவாக...!!!
சரிடா பச்ச நம்ம கனவுகளும் மெய்ப்படும்....!!!! இப்போ வந்த வேலைய பார்ப்போம்.. காணி உனக்கு நிறைய கிடைச்சிருக்கா.. ம்ம் இருக்குடா தங்கச்சிக்கு நோட்டு வாங்கும் அளவுக்கு தேறியிருக்கும்ன்னு நினைக்கிறேன்.. பச்ச நீயும் இன்னைக்கு எப்படியாச்சும் பேனா வாங்கிருடா..!! சரிடா வாங்கிருவேன் நாம நாளைக்கு சந்திப்போம்..!! ம்ம்ம் சந்திப்போம்...!!!

..கவிபாரதி..

எழுதியவர் : கவிபாரதி (5-Jun-15, 3:35 am)
பார்வை : 388

மேலே