எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவலம் காணுமிடம் கவிதை வரமறுத்து... என்னில் கண்ணீர் மட்டும்...

அவலம் காணுமிடம் கவிதை வரமறுத்து...
என்னில் கண்ணீர் மட்டும் பழமையை
ருசித்து கசந்து விடையாகிறது ...
அங்கே ஆலமர விழுதுகள்
தூளி ஆடிட சிறார்கள் இன்றி
மண்ணில் விழுந்து விம்மி அழுகிறது..
மாமர காய்களெல்லாம்
களவுக்கொள்ள விடலைகள் இன்றி
வாடிகுதித்து தற்கொலை செய்கிறது...
ஓங்கிய பனைமர நுங்குகளை
வண்டி உருட்டிட சிறுவர்கள் இன்றி
மண்ணில் புதைந்து மறுபிறவி தேடுகிறது...
காளையர் வியர்வையில் குளித்திட ஏங்கும்
இளவட்ட கல்கள் மாடுகள் பெய்திட
கட்டுதறியாகி கண்ணீர் விடுகிறது...
திண்ணைகள் இல்லா வீடுகள் எல்லாம்
தாயம் தட்டாங்கல் ஆட்டம் அறியாது
கைதிகள் தஞ்சமாகும் சிறையாய் போகிறது..
பதுமைகள் கைப்படாத பல்லாங்குழிகள்
இருட்டறை புகுந்து தூசிகள் தங்கி
குப்பைகளுக்குள் முடமாகிறது...
ஆடவன் கால்களில் அரங்கேறும்
சடுகுடு தாளமதில் புழுதிகள் பறந்திட
கனவுகள் கண்டே கிராமத்து மண்ணும் காத்துகிடக்கிறது..
செல்லி முடியா ஆட்டங்கள் பெற்ற பாரதமின்று
சொர்க்கத்தை விரட்டிய நரகமாய் தெரிவது
மானிடர் தேடிடும் முன்னேற்றமோ....???
மனம் உழுது உடல் உழைத்து நன்மை விளைத்த
விளையாட்டுதனை மறந்த நமக்கேது
நலமுடன் கூடிய நீடிய வாழ்வு...........??
ஆட்டங்கள் பெயர்கள் மாற்றங்கள் பெற்று
மனதினுள் நிற்காமல் மறந்தோடி போவது
நாம்மவர் யாவரின் அலட்ச்சியமே.....
பணம் புழங்கும் விளையாட்டுகள் மறந்து
பழமையை உணர்ந்துநாம் பார்த்திடுவோம்
மங்கிய ஆட்டங்கள் தேடிபிடித்து
மறுஉயிர் கொடுத்திடுவோம்...
உனது எனது வரிபணத்தில் ஒற்றை ஆட்டம்(கிரிகட்)
வளர்க்க வேண்டாம்.....உடல் நலம் பேணும்
தமிழர் மரபுவழி விளையாட்டுதனை பாதுகாப்போம்...!!
எந்நாட்டுபுற விளையாட்டுதனில் நாட்டம் அற்றவர்
எவரும் உண்டோ...?? நாட்டமற்ற பாவிகள் இருப்பின்
அவர்கள் சாவை தரும் இயந்திரத்திற்கு தத்துபிள்ளை..!
..கவிபாரதி...

பதிவு : கவிபாரதி
நாள் : 6-Mar-15, 9:18 pm

மேலே