நஞ்சை புஞ்சை விற்றெடுத்த நட்டு நகை அடகு வைத்து...
நஞ்சை புஞ்சை விற்றெடுத்த
நட்டு நகை அடகு வைத்து
பூர்வீக வீடு உடைத்து
நகரத்திலே வசதி என்று
கோடியிலே வீடு கட்டி
குருதி வற்றும் நாள்வரையில்
சொர்க்கம் உணரும் மாந்தர்களே..
பாசநேசம் பறிகொடுத்து
பாதியிலே நோய்பிடித்து
இன்பம் பறிக்கும் இறுதி நாள்வரவே
வாழ்ந்த வாழ்க்கை நரகம் என்று உணர்வீரோ..??
செல்வம் என்று கோடி சேர்க்க ஓடிடும் என்னினமே
பிறந்த மண்ணை விட்டு சென்றாலும் விற்றுவிடாதே..
தள்ளாடி தடிபிடிக்கும் நாள்வரவே தஞ்சம்புக
தாய்மடி போல் அரவணைக்கும் இடம்வேண்டும்..
ஆறடி மண்ணின் அருமை உணராத மாந்தர்களே
மின்சார தகனமேடை கதியென்று மாண்டிடாதீர்..
...கவிபாரதி...