மு.ஜீவராஜ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மு.ஜீவராஜ்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  15-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Mar-2013
பார்த்தவர்கள்:  455
புள்ளி:  44

என்னைப் பற்றி...

மொழிகளை அதிகம் இரசிப்பேன்....

என் படைப்புகள்
மு.ஜீவராஜ் செய்திகள்
மு.ஜீவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2019 2:18 am

ஒனக்கு பாட்டெழுத
ஒலகத்தையே நான் படிச்சே(ன்) ...
ஒரு வார்த்தை கிடைக்கலையே...
ஒனக்கீடா எனையில்லையே ...!

ஓடி வந்து ஒருத்தன் சொன்னா(ன்) ...
அம்மான்னா "சாமி"ன்னு ...!?

மனசுக்கது ஒப்பலையே ...
கருவறையில எடங்கொடுக்க
அந்த சாமிக்குத்தான் மனசில்லையே...

ஓ(ஞ்) சாமியாவே என்ன வச்சு
பாத்து மாசம் சொமந்து வந்த...!
ஒத்த வேள தவறாம
ரத்தத்துல பூச செஞ்ச...!
தொப்புள் கொடி ஏத்தி வச்சு
திருவிழாவா பெத்தெடுத்த...!

இன்னொருத்தன் ஓடி வந்தா(ன்)...
அம்மான்னா "அன்பு"ன்னா(ன்)...

அன்புக்கு கஷ்ட(ந்) தந்தா
அரவணைச்சு ஏத்துக்குமா...?

ஓ உசுரையே எட்டி ஒதைச்சு

மேலும்

மு.ஜீவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2019 7:14 pm

என் கவி உலகத்தில்...

என் கவிதை ... தாளில் அரங்கேறினால்
விண்மீன் அத்தனையும்... அழையா விருந்தாளிகள்...!
மழைவில் நிச்சயம்... அரங்கின் தோரணம்...!

வானின் நீலம்... அது
இரவு வந்தால் தீர்ந்துவிடும்...!
என் பேனா சுரக்கும் நீலம்... அதற்கோ
ஐபிஎல் ஏலம் தினம் நடக்கும்...!

நிலவு... உலகம் சுற்றும் வாலிபன் தான்...!
மாதம்பாதி... என்வீட்டு மொட்டைமாடி தோழன் தான்...!

கடந்த காலம் நடந்தே சென்று
கரிகாலனாய் வாழ்ந்திடுவேன் ...!
எதிர் காலம் இன்றே சென்று
ஏலியனையும் பார்த்திடுவேன் ...!

நிஜத்தில்...
டைம்மெசின் என்னவென்று...
தெரியா பொறியாளன் நான் ...?


இப்படி ஓர் உலகம்...
இத்தனை ந

மேலும்

அழகிய கவிதை எண்ணங்களின் வெளிப்பாடு என் கவிதை ... தாளில் அரங்கேறினால் விண்மீன் அத்தனையும்... அழையா விருந்தாளிகள்...! மழைவில் நிச்சயம்... அரங்கின் தோரணம்...! ----நான் ரசித்த வரிகள் 22-Aug-2019 10:27 pm
மு.ஜீவராஜ் - நெல்லை சுதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2017 1:20 pm

ஆண் நிலவு

நான் ஆண்நிலவு
சூரியன் என் சகோதரன்
எப்பொழுதும் என்னைக்
கண்காணித்துக் கொண்டிருப்பவன்
முழுநேரமும் வெளியில் செல்ல
என்னை அனுமதிப்பதில்லை
காரணம்
சுற்றிலும் நட்சத்திரக் குமரிகள்
என்னை நோக்கிக்
கண்சிமிட்டிக் கொண்டிருப்பதுதான்.

நான் ஆணாக இருந்தாலும்
அவ்வப்போது
மறைந்து மறைந்துதான்
வாழ்க்கை நடத்துகிறேன்.
நான் கோபக்காரனில்லை.
எல்லோரிடத்தும்
குளிர்ந்துதான் பேசுவேன் - என்
நெற்றியிலும் கன்னத்திலும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கறுப்புப் பொட்டுக்கள் இருந்ததால்
என்னைப் பெண் என்றே எண்ணினர்.

வானில் வலம்வந்த நட்சத்திரப் பெண்டிர்
நான் ஆண் என்றறிந்ததும்
ஓடி ஒளிந

மேலும்

எளிமையான வரிகள்...அருமை... 03-Jul-2017 8:09 pm
நட்சத்திரங்களை குமரிகளாகி நீங்கள் நிலவை மன்மதனாகியது அருமை... அழகான கதை போல உணர்ந்தேன் ... வந்து பார்த்தவர்கள் உங்களை ஆண் என்று உலகுக்கு சொல்லவில்லை என்பது அழகிய கற்பனை. மொத்தத்தில் அழகுங்க உங்க எழுத்து... 29-Jun-2017 12:40 am
மு.ஜீவராஜ் - பாவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2017 12:32 am

முப்பத்து முக்கோடி
தேவர்களில் ஒருவனாம்
"நிலவன்" !!!
காதல் கவிதை
ஒன்றை
முயற்சி செய்து
ரம்பைக்கு அளிக்க !!
கண்டுகொள்ளாத ரம்பை
தனக்கு வந்த
ஆயிரம் கடிதங்களில்
ஒன்றைக் காட்ட !!
வெம்பிப்போன நிலவன்
சபதம் ஒன்று போட்டான்
கோடி கடிதங்கள் எனக்கும்
வரணும் என !!!
அவன் பொல்லா நேரம் !!!
அருகிலிருந்த ரம்பையின்
தோழி
"தாதுஸ்து" சொல்ல
மனிதன் நிலா என்று
அகராதி தன்னில்
அறியாமல் பதிக்க
அவன் அவள் ஆக
நிலவன் பெண்பால் கொண்டு
நிலா ஆனான் !!
எனினும்
நெருப்பில்லாமல் புகையாது
என்ற ஆன்றோர் சொல்படி
ஆராய்ந்து பார்த்தால்
பூமி பெண்
பூமித்தாய் !!!
நிலமகள் என நிறைய உதாரணங்கள்!!!

மேலும்

நன்றிங்க பாலா !!! 25-Jul-2017 10:46 pm
நிலவை ஆண் பாலாக்கி விட்டீர்கள். இனி பெண்களை பாடுவது கொஞ்சம் கடினம்தான்... அருமை... 25-Jul-2017 10:13 pm
நன்றிங்க !!! 04-Jul-2017 8:13 pm
செம... 03-Jul-2017 8:05 pm
மு.ஜீவராஜ் - Mohanaselvam j அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2017 8:18 pm

அவன் தாய் உணவை ருசித்த நாளும்
தன் தேவதையை ரசித்த நாளும்
தனிமையில் இருந்த நாளும்
இந்த நிலவொளி மட்டும் அறியும்.


தேயும் நிலவை போல
ஓயாமல் உழைக்கும் ஆண்
ஒரு நாள் பௌர்ணமி போல்
என்றோ இளைப்பாறுகிறான்.


காதலை வருணிக்கும் போதும்
காதலியை வருணிக்கும் போதும்
கனவுகளை வருணிக்கும் போதும்
நிலவை மட்டுமே உவமையாய் வருணிப்பான்.


தாய் மடி இல்லா நாட்களில்
நிலவொளி தேடி உறங்கினான்
நிலவொளி கூட இல்லா நாட்களில்
யாரிடமும் சொல்லா உருகினான்.


மீசை வளைவு அழகையெல்லாம்
மூன்றாம் பிறை நிலவு சொல்லும்
மீசை இல்லா ஆண்களை உணர்த்தவோ?
அமாவாசை ஒன்று வந்து செல்லும்.


தனிமையில் இரவில் உழைக்கும் ஆணிற்கு

மேலும்

நன்றி நண்பரே 07-Jul-2017 7:46 pm
அருமை....வெற்றி பெற வாழ்த்துக்கள்... 03-Jul-2017 8:03 pm
நன்றி. 02-Jul-2017 2:21 pm
மீசை மூன்றாம் பிறை நிலவு ஒப்பிட்டமை நன்று 02-Jul-2017 10:29 am
மு.ஜீவராஜ் - குதமயந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2017 9:09 pm

அச்சம் என்பதை அறியாமல் வான்
உச்சியில் இருந்து எனைபார்க்கிறாய்.
ஊரே உறங்க நீமட்டும் விழித்து காதல் கதையை எனை கேட்கிறாய்.
வெள்ளி உனைக்கண்டு
அள்ளிநான் மலர
தள்ளி இருந்து நீ தவிக்கத்தான் விடுகிறாய்.
எனைவிட்டு நீமட்டும் வின்னிலே.
உனைஎண்ணி நான் இந்த மண்ணிலே..
இரவானால் வந்து விடும் காவலனே..என்
உறவாக வருவாயா
காதலனே..

மேலும்

நன்று...வாழ்த்துக்கள்.... 03-Jul-2017 7:59 pm
அருமையான வரிகள்... 26-Jun-2017 9:18 pm
அருமை நட்பே..... 26-Jun-2017 6:29 pm
அருமையா இருக்கு.. வாழ்த்துகள் .. 25-Jun-2017 9:32 pm
மு.ஜீவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2014 9:34 pm

உனக்கொரு
தோல்வி நேர்ந்தால்
அவன் கண்கள் கலங்கிவிடும்
அது
உன் துயரை உணர முடிந்ததால் அல்ல
உன் துயரில் பாதியைப் பெற முடியாததால் தான் ...

மேலும்

மு.ஜீவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2014 8:06 pm

உன் மேல் கொண்ட
ஒரு தலைக் காதலில்
ஒரு பக்கத்திற்குக் கவிதை எழுத நினைத்தேன்
முடியவில்லை
ஒரு வரியில் கவிதை எழுத நினைத்தேன்
முடியவில்லை
இறுதியில்
ஒரு எழுத்தில் மட்டுமே கவிதை எழுத முடிந்தது
அந்த எழுத்து "நீ" !
என் காதல் எப்பொழுது இரு தலை ஆகி
"நீ"யுடன் "நான்" சேரும் ?

மேலும்

படைப்பு எதார்த்தம் 07-Jul-2014 1:49 am
தோழா..அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ...மூலம் தொடங்கும் சொல் எண்ணிக்கை குறிக்கும் நிலையில் ஓர் என மட்டும் வரும் ..ஒரு அடுப்பு...ஒரு ஊர்,ஒரு எலி,ஒரு உரல் ...என வருதல் தவறு... கவிதை தலைப்பை சரி செய்யவும்..ஓர் எழுத்து கவிதை என... 06-Jul-2014 8:20 pm
விவேக்பாரதி அளித்த படைப்பை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-Apr-2014 2:03 pm

ஏர்பூட்டி மண்ணைத் தழுவி விளையாடு
யார்உள்ளார் உன்னைத் தடுத்திட - பார்மக்கள்
நல்லதை உண்ணவே உன்னையும் அர்பணிப்பாய்
நல்விடியல் உன்னால் வரும் !

-விவேக்பாரதி

படத்திற்கு நன்றி : ராஜபாண்டியன்

மேலும்

நன்றிகள் தோழரே 22-Apr-2014 5:26 pm
வெண்பா அருமை ... வாழ்த்துக்கள் ... 22-Apr-2014 4:56 pm
நன்றிகள் தோழமையே 22-Apr-2014 4:33 pm
அருமை தோழரே.. 22-Apr-2014 4:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (116)

balu

balu

திருவொற்றியூர்
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)
அஷ்றப் அலி

அஷ்றப் அலி

சம்மாந்துறை , இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (116)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

நெல்லை - திருநெல்வேலி
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (116)

sarabass

sarabass

trichy
Nithusyanthan

Nithusyanthan

Batticaloa
மதுரை மணி

மதுரை மணி

மதுரை
மேலே