குதமயந்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  குதமயந்தி
இடம்:  சீர்காழி
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Nov-2011
பார்த்தவர்கள்:  765
புள்ளி:  110

என்னைப் பற்றி...

அரசு மேனிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறேன்.வைரமுத்துவின் கவிதைகளை வாசித்து இல்லை சுவாசித்து வளர்ந்தேன். திரைபடத்தில் பாடலாசிரியராக வேண்டும் என்பது கனவு.சமுதாயத்திற்கு எதாவது செய்யவேண்டும் என்பது இலட்சியம்.

என் படைப்புகள்
குதமயந்தி செய்திகள்
குதமயந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2019 11:26 am

காலநிலை மாறிப்போச்சி.
காடு,மேடு காஞ்சி போச்சி.
மழைஇன்றி தவிக்கின்றோம்.
இறைவனை அழைக்கின்றோம்.
செயற்கை வாழ்க்கை வாழும் மக்களே,
நின்னுகேளுங்க...
இயற்கையை எதிர்த்திட்டா அழிவுதானுங்க...
காட்டுக்குள்ள வீடுகட்டி வாழ்ந்திருந்தோம் அப்போ...
வீட்டுக்குள்ள விவசாயம் செய்யும் நிலை இப்போ...
சுத்தமான. பூமியை தந்தது நம்ம. சாமிதான்.
.வத்திப்போச்சி செல்வ வளம்,
நம்ம சந்ததிங்க பாவம்தான்.
மாடிமேல. மாடி வச்ச. மானிடனே நில்லுங்க...
கோடி..கோடி செல்வம் சேர்த்து என்னபயன் சொல்லுங்க...
சுத்தமான காத்து..
வத்தாத தண்ணி..
நோ

மேலும்

குதமயந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2019 1:09 pm

உள்ளுக்குள் தோன்றிடும் உணர்வுகளை அடக்கி,
எல்லைக்குள் ஊடுருவும் அந்நியனை அடக்கி..
வெள்ளைபனிமலையில்,
கொல்லும் குளிரில்..
உறங்காத விழியோடு,உலவிடுவோம் வெண்மதியாய் ...
பகல் இரவு பாராமல் யுத்தங்கள் நடக்கும்.
துயில் கொள்ளமுடியாது,
சத்தங்கள் வெடிக்கும்..
இன்று,
எதிரியின் சதியில் எரிந்து போனோம்.
எதிரியின் சதியாலே எரிந்து,உயிர் பிரிந்தது.
கதறிஅழும் கண்ணீரில் கடல் அது நிறைந்தது..
துச்சமென உயிரைஎண்ணி, நாட்டின்
உச்சிக்கு நாங்கள் வந்தோம்.
எச்சி அவன் தீய. செயலால்
இன்னுயிரை இன்று தந்தோம்.
வச்சிஇனிபார்க்

மேலும்

குதமயந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2019 11:40 am

ஊரு உறவைஎல்லாம் விட்டு விட்டு வந்து,
பார்க்காத. ஏக்கத்தில் பலநாள் நொந்து,
பனிமழை காத்துல, பணிசெய்தோம் நாட்டுக்கு...
தனிஒருத்தன் குண்டுக்கு
இரையானோம் பலபேர்கள்
இனியார் பாதுகாப்பு எங்களின் வீட்டுக்கு?

மேலும்

குதமயந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2018 3:28 pm

இதயத்துக்குள்ளே உனக்கோர் இடம் வைத்தேன்.
உதயசூரியனே உன் கவியில் எனை மறந்தேன்.
மரணம் உனக்கில்லை என்றுநாங்கள் மகிழ்ந்திருக்க..
ரணமான செய்தி ஒன்று
இதயத்தை துளைத்தெடுக்க..
விழிகொட்டும் கண்ணீரை முடியவில்லையே தடுக்க.
வழிஇன்றி தவிக்கிறோம்
எழுந்துவா துயர் துடைக்க.
காலனுக்கும் காதலா
நோய்வடிவில் உனைக்கொ(ள்ள)ல்ல.
ஞாலத்தில் யாருமில்லை
ஞாயிரே உனைவெல்ல.
வங்க கடலோரம்
துயில் கொள்ளபோகிறாய்.
சிங்கத்தமிழனே,நீ
சரித்திரமாய் ஆகிறாய்.

மேலும்

குதமயந்தி - குதமயந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2017 10:47 am

தனக்கென ஒன்றும் சேர்க்காத
தன்னிகர் இல்லா தலைவர்.
மணக்கும் மல்லிகை போலவே
தூய உள்ளம் கொண்டவர்..
ஊணும், உறக்கமும் மறந்தவர்.
ஊரைக்காக்க பிறந்தவர்.
பள்ளிகள் பலநூறு திறந்தவர்.
வெள்ளியாய் பாரினில் உயர்ந்தவர்.
வறுமையை ஒழித்து கட்டினார்.
எளிமையாய் வாழ்ந்து காட்டினார்.
மாதவமாய் ஏழைகளின்
தலைவராக வந்தார்.
மாணவரின் பசிபோக்க
மதிய உணவு தந்தார்.
கடிகாரமுள்ளாக ஓடி ஓடி உழைத்தார்.
படிப்புக்கு பல திட்டம் போட்டிடவே
முனைந்தார்.
சொத்து சுகம் எதுவும் அவர் சேர்த்ததில்லையே.
கத்தும் கடல் போல அவர் அன்பின் எல்லையே.
நேர்மையாய் வாழ்ந்த நம்ம கருப்பு தங்கமே.
கார்மழை போல அவர் கருணை எங்குமே..

மேலும்

குதமயந்தி - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2017 5:39 am

இது ஒரு
இரவல் வாழ்க்கை
இதற்கொரு அலங்காரம்
அலங்காரங்களும் இரவல்
தினம் தினம் ஜனனம் மரணம்
இதில் நான் என்ற
அகங்காரம் வேறு
நினைத்து பார்
நீ கொண்டுவருவதில்லை
ஆகையால்
கொண்டுப்போக
உரிமையுமில்லை
எல்லாம் இரவல்
இதில் நான் என்னுடையது
என்ற சுயநலம் வேறு
இரவல் வாழ்க்கை
இதில் உன்னுடையது
என்று சொல்லிக்கொள்ள
ஒன்று மட்டும் உண்டு
அது ஈகை
இது போகும்போது
கூடவே வரும்...

மேலும்

மிக்க நன்றி நண்பரே .... 01-Jul-2017 6:46 pm
மிக்க நன்றி நண்பரே .... 01-Jul-2017 6:45 pm
சிறு கதை போல் வாழ்க்கை கவிதை போல் நினைவுகள் 01-Jul-2017 5:27 pm
வாழ்வின் தத்துவம் அருமை நண்பா.. 27-Jun-2017 6:19 pm
குதமயந்தி - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2017 5:39 am

இது ஒரு
இரவல் வாழ்க்கை
இதற்கொரு அலங்காரம்
அலங்காரங்களும் இரவல்
தினம் தினம் ஜனனம் மரணம்
இதில் நான் என்ற
அகங்காரம் வேறு
நினைத்து பார்
நீ கொண்டுவருவதில்லை
ஆகையால்
கொண்டுப்போக
உரிமையுமில்லை
எல்லாம் இரவல்
இதில் நான் என்னுடையது
என்ற சுயநலம் வேறு
இரவல் வாழ்க்கை
இதில் உன்னுடையது
என்று சொல்லிக்கொள்ள
ஒன்று மட்டும் உண்டு
அது ஈகை
இது போகும்போது
கூடவே வரும்...

மேலும்

மிக்க நன்றி நண்பரே .... 01-Jul-2017 6:46 pm
மிக்க நன்றி நண்பரே .... 01-Jul-2017 6:45 pm
சிறு கதை போல் வாழ்க்கை கவிதை போல் நினைவுகள் 01-Jul-2017 5:27 pm
வாழ்வின் தத்துவம் அருமை நண்பா.. 27-Jun-2017 6:19 pm
குதமயந்தி - குதமயந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-May-2017 8:58 pm

புயலிலே படகா மனசு இப்போ ஆச்சி.
மயக்கத்தில் உசுரு ஏன் மாறிப் போச்சி.
கண்ணால நீ சொல்லி போயிட்டடி காதல..
உன்னால உசுருக்குள்ள சோரு தண்ணி போகல..
அறையில பல நேரம் தனியா சிரிக்கிறேன்.
இரைதேடும் பறவையா உனைதேடி பறக்கிறேன்.
உன்னிடம் அப்படி என்னடி இருக்கு.
என்றடி தீருமோ என்காதல் கிறுக்கு.
கொட்டுது வார்த்தைகள் உன்பின்னே அருவியாய்..
ஒட்டுது உதடுகள்
உன்முன்னே துறவியாய்..
எல்லாமே நீயாக இயக்கவே..
முடியாது இனி உன்னை மறக்கவே..

மேலும்

பாடலாசியரே வருக.. காத்திருக்கிறோம்.. அருமை.. 27-Jun-2017 8:00 am
கொட்டுது வார்த்தைகள் உன்பின்னே அருவியாய்.. ஒட்டுது உதடுகள் உன்முன்னே துறவியாய்.. எல்லாமே நீயாக இயக்கவே.. முடியாது இனி உன்னை மறக்கவே". . அருமை 26-Jun-2017 9:22 pm
குதமயந்தி - குதமயந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2017 9:09 pm

அச்சம் என்பதை அறியாமல் வான்
உச்சியில் இருந்து எனைபார்க்கிறாய்.
ஊரே உறங்க நீமட்டும் விழித்து காதல் கதையை எனை கேட்கிறாய்.
வெள்ளி உனைக்கண்டு
அள்ளிநான் மலர
தள்ளி இருந்து நீ தவிக்கத்தான் விடுகிறாய்.
எனைவிட்டு நீமட்டும் வின்னிலே.
உனைஎண்ணி நான் இந்த மண்ணிலே..
இரவானால் வந்து விடும் காவலனே..என்
உறவாக வருவாயா
காதலனே..

மேலும்

நன்று...வாழ்த்துக்கள்.... 03-Jul-2017 7:59 pm
அருமையான வரிகள்... 26-Jun-2017 9:18 pm
அருமை நட்பே..... 26-Jun-2017 6:29 pm
அருமையா இருக்கு.. வாழ்த்துகள் .. 25-Jun-2017 9:32 pm
குதமயந்தி - வாசு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2017 8:18 am

தாங்கமுடியாத துன்பம் வந்தால் ,
துயர் நீக்கும் மெத்தையை தேடுகின்றேன்,
ஆனால் அப்போதே - அந்த
துன்பங்கள் பறந்துவிடுகின்றன,
தொலைத்த மெத்தையின்,
நிலைத்த நினைவுகளால்......

மேலும்

கருத்தாலும் ,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே..... 27-Jun-2017 5:07 pm
வலி அருமை 26-Jun-2017 6:37 pm
கருத்தாலும் ,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே..... 24-Jun-2017 7:41 am
உண்மைதான்..உணர்வு மிக்க வரிகள் 24-Jun-2017 4:00 am
குதமயந்தி - கருப்பசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2017 11:51 pm

வேற்று குலத்தில்
பிறந்தோம்...
மனதால் விரும்பியதால்
காதலித்தோம்...
எங்கள் சமூகம்
ஏற்க்காததால்
பதிவாளர் அலுவலகத்தில்
திருமணம்...
கலப்புத் திருமணசன்மானம் வழங்கியது அரசு....
அரசுக்கு நன்றி....
பிள்ளையும் பெற்றோம்...
பள்ளியில் சேர்க்கையில்
பிறப்புசான்றிதழ் போதத்தென
சாதிசசான்றிதழ்
கேட்டது அரசுப்பள்ளி..
மூண்டது சாதிக்கலவரம்
வீட்டில்....
உன் சாதி பெரிதா?
என் சாதி பெரிதா?
வழக்காடுமன்றத்தில்
வழக்கு தொடுக்கப்பட்டது...
பதிவாளர் அலுவலகத்தில்
நடந்த திருமணத்தை
வழக்காடுமன்றம்
ரத்து செய்தது....
பள்ளியில் சேரவேண்டியவன்
விடுதியில் சேர்க்கப்பட்டான்....
எங்கள் சாதி
சரியில்லையென
மகனுக்

மேலும்

நன்றி தோழர்களே... 09-Jul-2017 11:40 pm
நிஜம் நல்ல கற்பனை.. 25-Jun-2017 10:14 pm
உண்மை அழகாகச் சொன்னீர்கள்! 24-Jun-2017 4:52 am
குதமயந்தி - குதமயந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2017 9:47 pm

பாழடைந்த வீடாக நான் இருந்தேன் அன்று.
வாழ்வதற்கு எனைத்தேடி நீவந்தாய் இன்று.
சேருக்குள் நீர்போல சேரஆசை உனக்கு.
சேர்வதற்கு ஒருவழியும் தெரியவில்லை எனக்கு.
வேர்விட்ட செடி ஒன்று
கார்மழைக்கு காத்திருக்க.
புயல் எனவே பூகம்பம் புகுந்து
அதன் வேர் அறுக்க..
ஆசைக்கனவெல்லாம்
மடிந்தது மண்ணோடு.
வேசம் கலைக்காமல்
நடிக்கிறேன் உன்னோடு...

மேலும்

நன்றி 14-Jun-2017 6:56 pm
நன்று. தலைப்பு எனக்கு மிக பிடித்தது 14-Jun-2017 5:48 pm
அருமை.... 14-Jun-2017 4:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

வாசு

வாசு

தமிழ்நாடு
பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

வாசு

வாசு

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே