அனாதை சாதி
வேற்று குலத்தில்
பிறந்தோம்...
மனதால் விரும்பியதால்
காதலித்தோம்...
எங்கள் சமூகம்
ஏற்க்காததால்
பதிவாளர் அலுவலகத்தில்
திருமணம்...
கலப்புத் திருமணசன்மானம் வழங்கியது அரசு....
அரசுக்கு நன்றி....
பிள்ளையும் பெற்றோம்...
பள்ளியில் சேர்க்கையில்
பிறப்புசான்றிதழ் போதத்தென
சாதிசசான்றிதழ்
கேட்டது அரசுப்பள்ளி..
மூண்டது சாதிக்கலவரம்
வீட்டில்....
உன் சாதி பெரிதா?
என் சாதி பெரிதா?
வழக்காடுமன்றத்தில்
வழக்கு தொடுக்கப்பட்டது...
பதிவாளர் அலுவலகத்தில்
நடந்த திருமணத்தை
வழக்காடுமன்றம்
ரத்து செய்தது....
பள்ளியில் சேரவேண்டியவன்
விடுதியில் சேர்க்கப்பட்டான்....
எங்கள் சாதி
சரியில்லையென
மகனுக்கு புது சாதி
சூட்டப்பட்டது..
அனாதை...