மழலை மொழி
மழலை மொழி கேட்டு
மெய் மறந்து போக இறைவன் தான்
சிந்தனை கொண்டு படைத்தானோ?
மழலை பேசிடும் முதல்
மொழி கேட்டிட பெண்
அவளும் தன் வலி மறந்து
ஆனந்தம் கொள்ளும் மொழி
தன் பிள்ளை பேசிடும்
மொழியை அவரவர்
ஒவ்வொரு அர்த்தம் உருவாக்கி
கலக்கத்தில் இருந்தாலும்
தாய் மட்டும் புரிந்து கொள்ளும்
மொழி மழலை மொழி
குழந்தை பேசிடும் புன்னகை மொழி
அன்பு உள்ளம் கொண்டோரை மயக்கும் மொழி
மழலை சிந்தும் அழுகை சைகை3 மொழி
எதிரியை கூட அடிமையாக்கும் மொழி
மழலை செல்வம் இல்லாத
மாதர்கள் கேட்டிட துடிக்கும் மொழி
மொட்டுகள் மலராக காத்துஇருக்கும்
வண்டுகள் போல குழந்தைகள் சிந்தும்
இன்ப மொழி கண்டு ஆனந்தம்
அடைய காத்து இருப்பார் உறவுகள்