இரவல்

இது ஒரு
இரவல் வாழ்க்கை
இதற்கொரு அலங்காரம்
அலங்காரங்களும் இரவல்
தினம் தினம் ஜனனம் மரணம்
இதில் நான் என்ற
அகங்காரம் வேறு
நினைத்து பார்
நீ கொண்டுவருவதில்லை
ஆகையால்
கொண்டுப்போக
உரிமையுமில்லை
எல்லாம் இரவல்
இதில் நான் என்னுடையது
என்ற சுயநலம் வேறு
இரவல் வாழ்க்கை
இதில் உன்னுடையது
என்று சொல்லிக்கொள்ள
ஒன்று மட்டும் உண்டு
அது ஈகை
இது போகும்போது
கூடவே வரும்...

எழுதியவர் : செல்வமுத்து.M (27-Jun-17, 5:39 am)
Tanglish : iraval
பார்வை : 116

மேலே