பெண்மையின் அவலம்

பிறக்கும் போது கருவறை!
வயதுக்கு வந்தேன் தனியறை!
மணமானேன் மணவறை!
கைப்பிடித்தேன் கணவரை!
ஆயுள் முழுவதும் அடுப்பங்கறை!
குடித்துவிட்டு வந்தான் கன்னத்தில் அறை!
சில நேரம் கண்ணீர் விடும் பூஜை அறை!
பித்து பிடிச்ச இதய அறை!
ஆறுதல் அடையப் பிள்ளை அறை!
முடிவில் நிம்மதியிழந்து கல்லறை!
~ர-ஸ்ரீராம் ரவிக்குமார்