காமராஜர்
தனக்கென ஒன்றும் சேர்க்காத
தன்னிகர் இல்லா தலைவர்.
மணக்கும் மல்லிகை போலவே
தூய உள்ளம் கொண்டவர்..
ஊணும், உறக்கமும் மறந்தவர்.
ஊரைக்காக்க பிறந்தவர்.
பள்ளிகள் பலநூறு திறந்தவர்.
வெள்ளியாய் பாரினில் உயர்ந்தவர்.
வறுமையை ஒழித்து கட்டினார்.
எளிமையாய் வாழ்ந்து காட்டினார்.
மாதவமாய் ஏழைகளின்
தலைவராக வந்தார்.
மாணவரின் பசிபோக்க
மதிய உணவு தந்தார்.
கடிகாரமுள்ளாக ஓடி ஓடி உழைத்தார்.
படிப்புக்கு பல திட்டம் போட்டிடவே
முனைந்தார்.
சொத்து சுகம் எதுவும் அவர் சேர்த்ததில்லையே.
கத்தும் கடல் போல அவர் அன்பின் எல்லையே.
நேர்மையாய் வாழ்ந்த நம்ம கருப்பு தங்கமே.
கார்மழை போல அவர் கருணை எங்குமே..