இடர்ப்பாடி

மழையை வேண்டினோம்
காற்றுக் கூட இல்லை,
வெயில் சுட்டது.

சொர்க்கம் வேண்டினோம்
நகரம் கூட இல்லை
நரகம் வாய்த்தது.

கனிமரம் கேட்டோம்
காய்மரங்கூட இல்லை
முள்மரம் முளைத்தது.

நண்பனைக் கேட்டோம்
எதிரிகூட இல்லை;
துரோகி வாய்த்தான்

சலுகைகள் கேட்டோம்
உரிமைகூட இல்லை
கட்டளை இட்டார்கள்

தேவதை கேட்டோம்
மனுசியும் இல்லை
பிசாசு கிடைத்தது.

முதல்தரமனிதனை எதிர்பார்த்தோம்
சுமார்கூட இல்லை
கடைத்தரம் வாய்த்தான்.

எழுதியவர் : கனவுதாசன் (15-Jul-17, 9:06 am)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 54

மேலே