பிள்ளைக்காக வாழும் சொர்க்கம் நான் என

"அனைவரையும் வாழ விடுங்கள்
அனைத்திலும் வாழும் சுகங்கள்
அணைப்பதில் அன்பே எல்லை
அணைப்பதால் வாழ வழியும் இல்லை
காற்றுக்கு வேலி இல்லை
கடலுக்குக் காவல் இல்லை
வாழ்வதில் மாற்றம் இல்லை
வழக்காட யாரும் முன்வரவில்லை
அன்புக்கு நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
நீ எப்போதும் எந்தன் பிள்ளை
விளையாட்டாய்ப் பார்க்கிறாய் எந்தன் சொல்லை
அனலாய் நின்ற பேச்சு
கானல் நீராய் போச்சு
நீ என்றும் நலமாய் வாழ்வதற்காக
நான் உனக்காக உன்னோடு வாழும் சொர்க்கம்"

எழுதியவர் : சு.சிவசங்கரி (22-Mar-25, 10:00 am)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 8

மேலே