கனவுதாசன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கனவுதாசன் |
இடம் | : மானகிரி [காரைக்குடி] |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 667 |
புள்ளி | : 452 |
இழிவைத் தேடிச்சுமக்கும் உன்னைப்
புரிந்துகொள்ள முடியவில்லை.
பள்ளத்தை மட்டுமே
இலக்காய் கொண்டு
பயணிப்பது
நீருக்குத் தான் பெருமை.
மூளையும், சிந்தனையும்
சுற்றுப்புறமும்
இப்படித்தான்
சொல்லித் தருகிறதா?
சித்திர வானத்தைப் பறித்து
கைத்தலம் கொடுப்பேன் விரித்து
விண்மீன் தூண்டிலில் பிடித்து
விழிகளாய் அமைப்பேன் பார்த்து.
சூரிய நெருப்பைப் பிடித்து
சுடுவேன் கடலிலே எரித்து.
சந்திர வெளிச்சத்தைப் பிடித்து
சட்டைப் பையிலே அடைத்து
தந்திரம் செய்வேன் அணைத்து
தரமாட்டேன்; எனக்கே எனக்கு!
வாழ்க முழக்கத்தில் வாழ்ந்து விடுவீர்களா?
வீழ்க முழக்கத்தில் வீழ்ந்து விடுவீர்களா?
அட முட்டாள்களே!
முள் எண்ணங்கள்
உங்களையே கீறிவிட்டன.
பதவி எக்களிப்பு.
மேலே போக வேண்டும் என்ற எண்ணம்
கீழான வேலைகள் செய்யச் சொல்கிறது.
உயர்வு கொள்வதாய்
தாழ்வு கொள்கிறீர்!
வளர்வதாய் அழிகிறீர்!
உம் அறிவு, மனம்
தட்டிக் கொடுக்கிறதா?
தட்டிக் கெடுக்கிறதா
தூரத்தை எண்ணி
நாம் அழுத காலங்கள்
இனித் தூரமாக போகட்டும்
பார்க்க முடியாமல்
தவித்த தவிப்புகள்
இனித் தள்ளிப் போகட்டும்
கை கோர்த்து
கதை பேசிக் களிக்க
ஏங்கிய காலங்கள் இனி
கரைந்து போகட்டும்.
நீ எங்கோ; நான் எங்கோ
இருந்தாலும்
நம் இதயம் இணைந்தே
இருக்கும்.
உன்னோடு நான்வாழும்
கனவுகள் எனக்குப் போதுமடி.....!!!!
பாரதியை சபிக்கிறேன்!
ஏன் மூட்டினாய்
இவ் வேள்வித் தீயை?
கனன்று கொண்டிருக்கும்
எங்கள் ஏக்கங்களில்
ஏன் தெளித்தாய்
உன் சத்தியத்தை?
மறத்துப் போன
எங்கள் உடல்
என்ன தீங்கிழைத்தது உனக்கு?
சமையலறை தான்
சர்வமும் என்றால்
அங்கனமே மடிந்திருப்போமே!
கனவுகள் மட்டுமே
சாத்தியம் என்றால்
சளைக்காமல் கண்டிருப்போமே!
விலங்கினை உடைத்து
சிறகுகள் விரித்தால்
சிகரம் எட்டலாமென
பொய்யுரைத்தீரோ?
தத்திப் பறக்க முயலும்
சிட்டுக் குருவி
எப்படியும் ஒருநாள்
நத்தைபோல் ஓட்டுக்குள்
சுருண்டு விடப் போகிறதெனில்
ஏட்டுச் சுரைக்காயா
நீர் சமைத்த அறம்?
பெருங்கனவு பொசுங்கிவிட்ட
ப
உருவ மயக்கமும்
கருவ மயக்கமும்
பாடாய் படுத்துகின்றன.
அலங்காரங்களில்
அகங்காரங்கள்
ஓளிந்துகிடக்கின்றன.
எண்ணத்தைத்
தெரிவிக்க வந்த
வார்த்தைகள்
எண்ணத்தை
மறைக்கின்றன.
உள்ளுக்குள்
ஓதுங்கியும்,பதுங்கியும்
வாழ்ந்துகொண்டு
வாய்பேசும் வெளிப்படை.
காற்றீல்
புழுதிகள் மட்டுமல்ல
பொய்மையும்
சேர்ந்தே பறக்கின்றன.
மனிதன் கிழிந்து கிடக்கிறான்
யார் தைப்பது?
மனிதன் ஒளிந்து கிடக்கிறான்
யார் கண்டுபிடிப்பது?
மனிதன் கொள்ளையடிக்கிறான்
யார் தண்டிப்பது?
மனிதன் திருடுகிறான்
யார் கண்டிப்பது?
மனிதன் பொய்யாயிருக்கிறான்
யார் திருத்துவது?
மனிதன் வஞ்சகம் செய்கிறான்
யார் நெஞ்சு பிளப்பது?
மனிதன் நடித்துக்கொண்டிருக்கிறான்
யார் ஒப்பனை கலைப்பது?
மனிதன் சிதறிக் கிடக்கிறான்
யார் சேகரிப்பது?
மனிதன் சூதாயிருக்கிறான்
யார் அகற்றுவது?
மனிதன் அழுக்காய் கிடக்கிறான்
யார் சலவை செய்வது?
மனிதன் விலங்காய்த் திரிகிறான்
யார் மனிதனாக்குவது !!!