சித்திர

சித்திர வானத்தைப் பறித்து
கைத்தலம் கொடுப்பேன் விரித்து

விண்மீன் தூண்டிலில் பிடித்து
விழிகளாய் அமைப்பேன் பார்த்து.
சூரிய நெருப்பைப் பிடித்து
சுடுவேன் கடலிலே எரித்து.

சந்திர வெளிச்சத்தைப் பிடித்து
சட்டைப் பையிலே அடைத்து
தந்திரம் செய்வேன் அணைத்து
தரமாட்டேன்; எனக்கே எனக்கு!

எழுதியவர் : வானம்பாடி கவிஞர் கனவுதாச (10-Nov-22, 9:55 am)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : sittira
பார்வை : 66

மேலே