ஒரு காட்சி

மாவிலை கீழே கிடந்தது.
பச்சையம் மாறாத இலை
மிக நீண்ட இலை.

சரவென்று வந்த பாம்பு
தயங்கி நின்றது.

காற்றுத் தூக்கி வீசியது
மாவிலை
பாம்பின் பக்கத்தில்
போய் விழுந்தது.

பாம்பு கொத்தியது.
மறுபடி காற்றுத்தூக்கி
மாவிலையைத் தள்ளிப்போட்டது.

மறுபடி , மறுபடி என்று
மீண்டும் மீண்டுமான
பாம்பின் கொத்தல்கள்.
எல்லாக் கொத்தும்
தரையில் பட்டுத்
தலை தெறித்து வலித்தது.

புல்வெளியில் கிடந்த
மாவிலையை
விருட்டென்று சீரிப்
பாம்பு கொத்தியது.

இலை நகர்ந்தது காற்றில்.

பாம்பின் கொத்தில்
தடித்த இரும்புக் கம்பி
உள் நுழைந்து
பாம்பைக் குத்தியது.
பாம்பு துடி துடித்து
இறந்து கொண்டிருந்தது.

மாவிலை பறந்து கொண்டிருந்தது.

எழுதியவர் : வானம்பாடி கவிஞர் கனவுதாச (10-Nov-22, 9:39 am)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : oru kaatchi
பார்வை : 152

மேலே