ஒளிந்து

உருவ மயக்கமும்
கருவ மயக்கமும்
பாடாய் படுத்துகின்றன.

அலங்காரங்களில்
அகங்காரங்கள்
ஓளிந்துகிடக்கின்றன.

எண்ணத்தைத்
தெரிவிக்க வந்த
வார்த்தைகள்
எண்ணத்தை
மறைக்கின்றன.

உள்ளுக்குள்
ஓதுங்கியும்,பதுங்கியும்
வாழ்ந்துகொண்டு
வாய்பேசும் வெளிப்படை.

காற்றீல்
புழுதிகள் மட்டுமல்ல
பொய்மையும்
சேர்ந்தே பறக்கின்றன.

எழுதியவர் : கனவுதாசன் (27-Feb-16, 11:06 pm)
பார்வை : 114

மேலே