லெனின்-வெண்பா
சீரிய சிந்தையும் தேர்ந்த மதியுமே
கூரிய வாளென கொள்பவன் - பாரினில்
நேரிய கொள்கை நிறைந்த தெளிவுடனே
காரியம் ஆற்றுவா னாம்...!
நெஞ்சுரம் கொண்டதோர் நேசத் தலைவனாம்
அஞ்சிடா உள்ளமும் ஐயமிலா எண்ணமும்
வஞ்சகம் கொண்டதோர் வர்கத்தை நோக்கியே
மிஞ்சியே மீட்டும் குரல்...!
-வெண்பா