அடி போதுமடி
தூரத்தை எண்ணி
நாம் அழுத காலங்கள்
இனித் தூரமாக போகட்டும்
பார்க்க முடியாமல்
தவித்த தவிப்புகள்
இனித் தள்ளிப் போகட்டும்
கை கோர்த்து
கதை பேசிக் களிக்க
ஏங்கிய காலங்கள் இனி
கரைந்து போகட்டும்.
நீ எங்கோ; நான் எங்கோ
இருந்தாலும்
நம் இதயம் இணைந்தே
இருக்கும்.
உன்னோடு நான்வாழும்
கனவுகள் எனக்குப் போதுமடி.....!!!!