agan - சுயவிவரம்

(Profile)



நடுநிலையாளர்
இயற்பெயர்:  agan
இடம்:  Puthucherry
பிறந்த தேதி :  28-Apr-1955
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jul-2012
பார்த்தவர்கள்:  9542
புள்ளி:  4015

என்னைப் பற்றி...

தி.அமிர்தகணேசன் (அகன் )(புதுவை காயத்திரி )
agan123@ymail.com
9443360007
அறையின் மூலையில்

வெதுவெதுப்பு காற்றோடு

கவிதை எழுதியது போதும்......

..

கட்டிலின் மேல் கற்பனை ரதத்தில்

கட்டியவள் காதுகளில்

கவிதை இசைத்தது போதும்...



காதல் கடித கட்டுகளுக்குள் நுழைந்து

காதலியின் ஸ்பரிசம் முகர்ந்து

கவிதை படைத்தது போதும்...



சாளரம் திற...,

வெளியில் பறக்க

ஆகாயம் தேடும் பறவைகளைப் பாடு...!



அமர,

பூக்கள் தேடும் பட்டாம் பூச்சிகளுக்கான

கவிதை எழுது...!



நாற்றங்கால்களை நாடித் தவிக்கும்

முளை பயிர்களின் முனகல்களை எழுது...!



உன் வரியையும் என் வரியையும் வாங்கி

உல்லாச ஊழல் ஊர்வலம் போகும்

உன் மத்தர்களை ஒழிக்கப் பாடு...!



அறையை விட்டு வெளியே வா...

அங்குல அங்குலமாய் வந்தாலும் சரி..



ஆனால் அது





உன் மரணத்திற்கு முன்பாக இருந்து விடட்டும்!

என் படைப்புகள்
agan செய்திகள்
agan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2018 11:59 am

என் சந்ததியினரோடு
எல்லாப் பொழுதுகளினுடே
சிரித்துக் கொண்டிருந்த மண்நிலம் என
ஊர் என்று ஒன்று அன்று இருந்தது ;

வயற்காட்டிலும்
ஓணான்கொடி 'ரோதையிலும் "
களாக்காய் புதர்களிலும் ..
மண்மணம் விதவிதமாய்
மந்தகாசமாய்
அன்று மடங்கி வெளியேறாமல்
மூக்கினுள் முங்கிக்கிடந்தது....

பசுமைப் போர்வைப் போர்த்தி
படுத்துக்க கிடந்தது அந்த ஊர்
எக்காலத்திலும் ;

தெருக்களால் நிரம்பி இருந்த
அந்த ஊரில்
திண்ணைகள் இருந்தன ;

அன்பு நிழலாடிய திண்ணைகளில்
'தாப்பு ' கிடந்தனர் பக்கத்து ஊர்க்காரர்கள்
பசியாறி ;

ஒரு வீட்டு தீக்கங்கு
தெருவின் பசிதீர்த்துக் கனிந்திருந்தது ;

கிணற்றடியில் பல வி

மேலும்

சுவாரஸ்யம் 30-Nov-2018 6:21 pm
agan - agan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2018 9:30 pm

அவளின் அவர் 2
2
இதுவரை.....(அதிகாலையின் எந்த சப்தம் இன்றி பொழுது விடியும் நேரத்தில் பக்கத்து வீட்டில் ஒலித்த சுப்ரபாதம் கெள்சல்யாவின் முதலிரவினை அன்று அவர் எழுதி அளித்த சேகுவாரா பற்றிய கவிதையும் என சில சங்கதிகளை நினைவூட்டியது..அவளின் அவர் இன்னும் எழுந்திருக்கவில்லை.)


==========இனி.............,

"ஆமா...என்னை நீங்க என்ன 'ங்க "போட்டு பேசரீங்க ' என்றாள்

"ஏன்...கூப்பிட்டா என்ன..? என்னை மாதிரியே நீங்களும் ஒரு மனித இனம் தானே...."

'இருந்தாலும் நான் பெண்...நீங்க ஆண்.."

"ஓர் உண்மை தெரியுமா உங்களுக்கு? ஆணை விட பெண்ணின் வலிமைக்கு பெண்மையும் பிள்ளைப் பேறும் போதுமே... "

'இதுவரை

மேலும்

சாதாரண வரிகளில் சவுக்கடி..... ஒளித்துவைத்து வீசுகிறீர்; அருமையான படைப்பு....... 07-May-2018 1:16 pm
நீட் தேர்வு நுழைவு சீட்டும் புளிச்சோறு டப்பாவும்.. தும்பிகள் பறக்கின்றன சுதந்திரமாய் ...... வால் பிடித்து விளையாட சிறுசுகளுக்கு பிடித்தளிக்கும் அவனது விரல்கள் இல்லாமல்......!! பொன்வண்டுகள் பூரிப்புடன் திரிகின்றன.... நூல்கட்டி இழுத்து , மழலை மந்தைகளுக்கு தீப்பெட்டிக்குள் போடுமவன் விரல்கள் இல்லாமல்.....!!! வண்ணப்பட்டம் பறக்க முடியாமல் தவிப்புடன் தவிக்கும் அவனது 'தம்பி'களுக்காய் ..... நீண்ட வால்கட்டி நூலைச் சிம்பி விடுமவன் விரல்கள் இல்லாமல்....!!! சுட்டு வைத்த முறுக்குகளின் போர்வையாய் எறும்புகள்.. தின்று தீர்த்து மீண்டும் மீண்டு கேட்டு ஆத்தாவை ரசிக்க வைக்கும் அவனில்லாமல்....!! வீதியின் வீடுகளின் கண்ணாடிகள் உடைய முடியாமல் உவகையுடன்- அவனது பந்தடிக்கும் மட்டைகள் விதவைகளாய் மூலைகளில் அவனில்லாமல்...!! துரத்தி துரத்தி நீர் பீச்சியடித்தி விளையாடும் அவனது தங்கைகள் மெளன மேடுகளில் அவனில்லாமல்...!!! எங்கு நோக்கினும் அவனுக்கான ஏக்க விழிகளை வீசி விசிறியடித்து விசில் அடிப்பதை மறந்த அவனது சேக்காலிகள் சோகமாய் அவனில்லாமல்.... !! "லே , சின்னவனே வந்திட்டியாம்லே.. வா..வா... வரகு அடை கருப்பட்டித்தூள் சாப்பிடுலே.. லே சின்னவனே..வந்திட்டியாம்லே.."" .....மூன்று மாதமாய் முனகலை மூச்சாக்கி கிடக்கும் அவன் அப்பாத்தா மட்டும் நம்பிக்கை நாழிகைகளுக்குள்..!!!!. எப்படி சொல்வேன் எல்லோரிடமும் ..... புகைவண்டி வெடிவிபத்தில் தேடப்படும் 'சந்தேக ' குற்றவாளிகளுள் அவனும் ஒருவன் என அள்ளிச்சென்ற இராஜஸ்தான் போலீஸ் கவனிக்கவில்லை அவனிடமிருந்த பிடிங்கி எறிந்த மஞ்சள் பையினுள் இருந்த நீட் தேர்வு நுழைவு சீட்டையும் புளிச்சோறு டப்பாவையும்.!!! _ அகன் 07-May-2018 10:57 am
“தோழர் கெளசல்யா ..எனக்கு ஏற்கனவெ இரண்டு மனைவிகள் உள்ளனர் என்பதை மறைக்க விரும்பவில்லை ” என்ன நடக்குது இங்க....???!! கதை ஆரம்பத்தில் நன்றாகத்தான் போனது ஆனால் இப்போது பாவம் கனகா.....? 07-May-2018 10:28 am
வியப்பில் தொலைந்து போய்க் கொண்டிருக்கிறேன். வெள்ளை வானத்தில் நீல நட்சத்திரங்கள் போல ஏதோ ஒரு புதிய கதவை ஓர் உள்ளம் தட்டிக் கொண்டிருக்கிறது. உள்ளே நுழைந்த பின்னும் அங்கே கதவுகள் திறக்கப்படவில்லை என்பது ஆச்சரியம் தான். தேகத்தின் அளவை கண்களால் ருசிக்கும் உள்ளங்கள் நிறைந்த யுகத்தில் பெண்மையும் மதிக்கும் உதடுகளுக்கு மெளனங்கள் தான் தூய்மையான வார்த்தைகள். நெறியான வாழ்க்கையில் எண்ணங்கள் என்ற பறவையின் சிறகுகளுக்கு யாராலும் தாழ்பாள்கள் போட முடியாது. இணைவுகள் ஐக்கியமான பின்னும் முடிவில் மீண்டும் ஓர் வியப்பில் முற்றுப்புள்ளி வைத்தது புதிராகயுள்ளது. நாவலின் மூச்சும் இது தானே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Apr-2018 1:19 am
agan - எண்ணம் (public)
07-May-2018 10:55 am

விதை நெல்லும் நீட் தேர்வும்...

உடல்வலி உள்ளத்தின் நோவு
மருண்ட திசைகள் 
புரியா மொழி
உறக்கம் மறுத்த இரவு
அச்சமூட்டிய பரிசோதனைகள்
நடுங்கிய விரல்கள் வழி 
நட்டு வைத்த விடைநாற்றுகள் ......
......இவற்றுக்கெல்லாம்தான் 
அப்பா காசு கொண்டுவந்திருந்தார்
-விதை நெல்லை விற்று....
அம்மாவின் பங்குக்கு தாலி....
அப்பாத்தாவும் பாம்படம் தொலைத்திருந்தாள்.
தங்கையின் கண்களில் 
தமையனின்மருத்துவ ஒப்பனை 
ஒட்டிக்கிடக்க
ஊர்மாறி ஊர்வந்த அவன் 
“ நீட்”எழுதி 
பசியோடு கிடக்கும் அப்பனுக்கு விளக்கம் கூற
வந்தனை வரவேற்றது 
விதை நெல்காசில் பதராகிப் போன அப்பன்
ஊடகங்களின் இருநாள் தீனியாகிய அவன்
விறைத்துப்போயிருந்த அப்பா கைகளை 
விரித்துப் பார்த்தான் 
வடை ஒன்று .....பிஞ்சிப்போய்
தன் பசிக்காய்.....??!!!!! 

- அகன்

மேலும்

agan - agan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2018 9:34 pm

அவளின் அவர் 3
அவளின் அவர்-3

இதுவரை (.....(அதிகாலையின் எந்த சப்தம் இன்றி பொழுது விடியும் நேரத்தில் பக்கத்து வீட்டில் ஒலித்த சுப்ரபாதம் கெள்சல்யாவின் முதலிரவினை அன்று அவர் எழுதி அளித்த சேகுவாரா பற்றிய கவிதையும் என சில சங்கதிகளை நினைவூட்டியது..தன்னை இனி கெளசல்யா என விளிப்பது என்றும் ஒரு தோழராய் பாவித்து ஒருவரை ஒருவர் மரியாதையாக அழைத்துக் கொள்ள வேண்டுமென்று கூறிய அவர் தனக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உண்டென சொன்னார்.அவளின் அவர் இன்னும் எழுந்திருக்கவில்லை.)
-----------------இனி…….

சற்றே கலவரத்தோடு சன்னலோரம் வந்து நின்றாள் கெளசல்யா..குழப்ப வரிகள் நெற்றி சிலேட்டில் எதையோ எழுதத் தொடங்கின…சன்ன

மேலும்

தங்களின் கவிதை, பல செய்தியூடகங்களால் கலங்கடிக்க செய்ய முடியாத என்மனதை கலங்கிவிட்டது...... 07-May-2018 12:23 pm
விதை நெல்லும் நீட் தேர்வும்... உடல்வலி உள்ளத்தின் நோவு மருண்ட திசைகள் புரியா மொழி உறக்கம் மறுத்த இரவு அச்சமூட்டிய பரிசோதனைகள் நடுங்கிய விரல்கள் வழி நட்டு வைத்த விடைநாற்றுகள் ...... ......இவற்றுக்கெல்லாம்தான் அப்பா காசு கொண்டுவந்திருந்தார் -விதை நெல்லை விற்று.... அம்மாவின் பங்குக்கு தாலி.... அப்பாத்தாவும் பாம்படம் தொலைத்திருந்தாள். தங்கையின் கண்களில் தமையனின்மருத்துவ ஒப்பனை ஒட்டிக்கிடக்க ஊர்மாறி ஊர்வந்த அவன் “ நீட்”எழுதி பசியோடு கிடக்கும் அப்பனுக்கு விளக்கம் கூற வந்தனை வரவேற்றது விதை நெல்காசில் பதராகிப் போன அப்பன் ஊடகங்களின் இருநாள் தீனியாகிய அவன் விறைத்துப்போயிருந்த அப்பா கைகளை விரித்துப் பார்த்தான் வடை ஒன்று .....பிஞ்சிப்போய் தன் பசிக்காய்.....??!!!!! - அகன் 07-May-2018 10:54 am
எழுந்திருக்க விட்டாதானே....??? அதான் காவிரி ,மீத்தேன்,நீட்,எஸ்விசேகர்.....இப்படியெல்லாம் கிடக்குதுல்லா?? 07-May-2018 10:52 am
அவர் எப்பதான் எழுந்திரிப்பார்......................... ஒருவேளை கும்பகர்ணன் வம்சமாயொருப்பாரோ.........? நல்லாருக்கு..... 07-May-2018 10:37 am
agan - எண்ணம் (public)
08-Apr-2018 9:37 pm

தோழர்களுக்கு  வணக்கமும் அன்பும். மீண்டும் வந்துள்ளேன் தொடர்கதை அளித்திட...... 

அகன் 

மேலும்

agan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2018 9:34 pm

அவளின் அவர் 3
அவளின் அவர்-3

இதுவரை (.....(அதிகாலையின் எந்த சப்தம் இன்றி பொழுது விடியும் நேரத்தில் பக்கத்து வீட்டில் ஒலித்த சுப்ரபாதம் கெள்சல்யாவின் முதலிரவினை அன்று அவர் எழுதி அளித்த சேகுவாரா பற்றிய கவிதையும் என சில சங்கதிகளை நினைவூட்டியது..தன்னை இனி கெளசல்யா என விளிப்பது என்றும் ஒரு தோழராய் பாவித்து ஒருவரை ஒருவர் மரியாதையாக அழைத்துக் கொள்ள வேண்டுமென்று கூறிய அவர் தனக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உண்டென சொன்னார்.அவளின் அவர் இன்னும் எழுந்திருக்கவில்லை.)
-----------------இனி…….

சற்றே கலவரத்தோடு சன்னலோரம் வந்து நின்றாள் கெளசல்யா..குழப்ப வரிகள் நெற்றி சிலேட்டில் எதையோ எழுதத் தொடங்கின…சன்ன

மேலும்

தங்களின் கவிதை, பல செய்தியூடகங்களால் கலங்கடிக்க செய்ய முடியாத என்மனதை கலங்கிவிட்டது...... 07-May-2018 12:23 pm
விதை நெல்லும் நீட் தேர்வும்... உடல்வலி உள்ளத்தின் நோவு மருண்ட திசைகள் புரியா மொழி உறக்கம் மறுத்த இரவு அச்சமூட்டிய பரிசோதனைகள் நடுங்கிய விரல்கள் வழி நட்டு வைத்த விடைநாற்றுகள் ...... ......இவற்றுக்கெல்லாம்தான் அப்பா காசு கொண்டுவந்திருந்தார் -விதை நெல்லை விற்று.... அம்மாவின் பங்குக்கு தாலி.... அப்பாத்தாவும் பாம்படம் தொலைத்திருந்தாள். தங்கையின் கண்களில் தமையனின்மருத்துவ ஒப்பனை ஒட்டிக்கிடக்க ஊர்மாறி ஊர்வந்த அவன் “ நீட்”எழுதி பசியோடு கிடக்கும் அப்பனுக்கு விளக்கம் கூற வந்தனை வரவேற்றது விதை நெல்காசில் பதராகிப் போன அப்பன் ஊடகங்களின் இருநாள் தீனியாகிய அவன் விறைத்துப்போயிருந்த அப்பா கைகளை விரித்துப் பார்த்தான் வடை ஒன்று .....பிஞ்சிப்போய் தன் பசிக்காய்.....??!!!!! - அகன் 07-May-2018 10:54 am
எழுந்திருக்க விட்டாதானே....??? அதான் காவிரி ,மீத்தேன்,நீட்,எஸ்விசேகர்.....இப்படியெல்லாம் கிடக்குதுல்லா?? 07-May-2018 10:52 am
அவர் எப்பதான் எழுந்திரிப்பார்......................... ஒருவேளை கும்பகர்ணன் வம்சமாயொருப்பாரோ.........? நல்லாருக்கு..... 07-May-2018 10:37 am
agan - agan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2016 8:10 am

தமிழன்பன் விருது 2016
@@@@@@@@## 
மகாகவி ஈரோடு தமிழன்பன் 84 ஆம் பிறந்தநாள் விழா மற்றும் " ஈரோடு தமிழன்பன் ஆயிரம் " நூல் வெளியீடு..... மற்றும் விருதளிப்பு 
@@@@@@## 

நாள் 12.11.2016 
இடம் : முத்தமிழ்ப்பேரவை , திருவாவடுதுரை இராஜரத்தினம் கலையரங்கம் , 
இராஜா அண்ணாமலை புரம் 
( எம்.ஜி.ஆர்_ ஜானகி கல்லூரி எதிரில்) 

தோழர்களே.... 
வணக்கம். 
எழுத்து வீதியில் 
அலங்கார கோலமி்ட 
வாக்கியப் புள்ளிகள் தந்த 
உங்களுக்குக் களிப்புக் களிம்பு 
பூச அழைக்கிறேன் .... 
வாரீர்... 
உங்கள் விரல்களைத் தமிழால் அலங்கரித்து மகிழ அழைக்கிறேன் வாரீர்...

உங்கள் 
கற்பனைப் பறவைகள் 
நூல் வானில் பறப்பதையும் 
காண வாருங்கள்..... 

பிற மொழி கலப்பின்றி 
நம்தாய் மொழிப்பேணுவோமென 
இரத்த அணுக்களில் 
நாம் இணைந்து 
சத்தமாய் 
எழுதி வைப்போம் இனி. ..... 

வாருங்கள் 
ஒரு புன்னகையோடும் 
ஒரு கைகுலுக்கலோடும் 

முகநூலின் மணம்வீசிய உங்கள் 
கவிமலர் பதித்த பாதிப்புகள் 
ஒரு பூங்கொத்தாய் 
உங்கள் விரல்களுக்குள்... 
நூலாய் ...விருதாய்...!! 
பூத்த நூறு பூக்களை 
ஒரே ­ கொத்தாய் 
ஒரு நூலாய் பெற்று இன்புறுங்கள்_ 
இதழ்களாய் உங்கள் உழைப்பு... 
பாராட்டாய் விருதளிப்பு... 

வெவ்வேறு மண்ணின் 
பறவைக் கூட்டம் 
தத்தம் கூடுகளோடு 
ஒன்றாய் ஒரே வானில் ( சென்னையில்) 
நீந்திடும் நிதர்சன பொழுது 
விடியப்போகிறது 12.11.16 இல் 
வாருங்கள்…! 

தமிழன்பன் _80 விருதுகள்: 

சீதா ரவி (இதழியல்) 
கமல்காளிதாஸ் 
( வடிவமைப்பாளர்) 
Dr. கோபி ( யாழ் அரங்கம்) 
வள்ளிமுத்து ( திருக்குறள் பரப்பு) 
கே.ஆர் இராசேந்திரன் (கவிதை மற்றும் வேளாண்மை) 
இளவமுதன்( காட்சி வழி ஊடகம்) 
ராஜா சுந்தர்ராஜன் ( விமர்சனம்) 

கவிதை: 
நிஷா மன்சூர், மேட்டுப்பாளையம் 
உமா மோகன் , புதுச்சேரி 
அ.வெண்ணிலா , வாணியம்பாடி 
சந்துரு, சென்னை 
கோவை அறச்செல்வி, 
கரு கரிகாலன் , 
காளி குருவி , (வாழ்வியல் கவிதை) 
நஸீஹா மொஹைதீன் , 
இவன் தங்கா, 
வளவன் கரிகாலன் 
ஆன்மன், 
சுரேஷ் பரதன் ,தில்லி 
முகமது சலீம் 
முருகன் சுந்தரபாண்டியன் 
றாம் சங்கரி, 
இளங்கவி அருள்செல்வன் , புதுச்சேரி 
மயிலாடுதுறை இளையபாரதி , 

( எழுத்து்.காம்) 

பொ.சாந்தி, சென்னை 
சியாமளா ராஜசேகர்,( மரபுக் கவிதை) 
நிலாகண்ணன் ,சென்னை 
மகிழினி, கோவை 
வீ .திலகவதி, திருவனந்தபுரம் 
வளர்மதி, மதுரை 
மு .ரா ( விமர்சனம்) 
அமுதா அம்மு , சென்னை 
பனிமலர், சென்னை 
ஜெயாராஜரத்தினம் , திருச்சி 
எ கே கார்த்திகா, 
குமார் பாலகிருஷ்ணன், திருப்பூர் 

வெளிநாட்டுப் படைப்பாளிகள்:( கவிதை) 
முனியாண்டி ராஜ் , 
முகமது பாட்சா , 
சுதந்திரன், , 
மீயாழ் செல்வன், 
தருமராஜ் பெரியசாமி 
நுஸ்கி மு எ.மு, ( எழுத்து்.காம்) 
கே.இனியவன், ( எழுத்து்.காம் 
கயல்விழி, ( எழுத்து்.காம் 
முதல்பூ ( எழுத்து்.காம் 

சா.சரவணன் ( நூல் கட்டமைப்பாளர்) 
பெ.மயிலவேலன் (பதிப்பாளர்) 

கல்வி: 
ஆசிரியர் ராஜேஷ் நரசிம்மன், ( கற்பித்தல் வகைமைகள்) ஆசிரியர் சசிகுமார் ( பள்ளி பராமரிப்பு), 
ஆசிரியர் இராஜலட்சுமி, ( உரைவீச்சு) 
ஆசிரியர் பூபாலன் சுரேந்தர் ( சுற்றுச்சூழல் & பறவை பேணுதல்) 

ஓவியம்: 
ஓவியர் உமாபதி , 
ஓவியர் இளமுருகன் , 
ஓவியர் ஆனந்தராஜ் , 
ஓவியர் இராஜாகண்ணன் , , 

நிழற்படக் கலை: 
பாஸ்கர் , 
அருண் 
சேகர். 
வெங்கிட்டு 
சிங்காரவேல்

மேலும்

நன்றி தோழர் 12-Oct-2016 6:01 pm
தோழர்கள் தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு இச்செய்தியை பகிரவும்... விருது வாங்கும் அனைவருக்கும் இந்த நற்செய்தி விரைந்து சென்றடைதல் நலம்.... 11-Oct-2016 9:28 pm
agan - rameshalam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jun-2016 7:22 pm

நிலவு இடம் பெயரும் இரவுகளில்
கோடையின் சுழலாய் மேலெழும்புகிறது
உன் பிரியத்தின் வாசனை.
இரவின் நீலத்தைக் குடித்தபடி
இடம் வலமாய் அசைகிறது
உயிர்மை ததும்பும் என் கனவுகள்.
உறைந்த நீராகி
அசையாமல் கிடக்கிறது காலம்.
முன்னறிவிப்பின்றிக் கசியும் வெளிச்சத்தில்
என் கண்களில் நகர்கிறது
உனது சாயலின் சங்கேதக் குறிப்புகள்.
நம் நினைவின் பிரியங்களைக் கையில் ஏந்தி
விரிந்த சிறகுகளில் சரிகிறது
அன்பின் விசும்பல்.

மேலும்

ரொம்பவும் நன்றிகள்! சார். 10-Jun-2016 11:02 pm
ரொம்பவும் நன்றிகள்! சர்பான். 10-Jun-2016 11:01 pm
மென்மையின் மறுபெயர் ரமேஷாலம்... .அருமை ஆலம்பனா. 10-Jun-2016 8:17 am
அழகான உணர்வுகளின் மெளனங்கள் கூட அன்பின் தீபத்தில் பார்வைகளில் மொழியாகும்..வாழ்க்கை எனும் சிறு நகர்வில் அன்பு என்பதே மனிதனை மனிதனாய் ஆள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jun-2016 5:28 am
rameshalam அளித்த படைப்பில் (public) rameshalam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jun-2016 7:22 pm

நிலவு இடம் பெயரும் இரவுகளில்
கோடையின் சுழலாய் மேலெழும்புகிறது
உன் பிரியத்தின் வாசனை.
இரவின் நீலத்தைக் குடித்தபடி
இடம் வலமாய் அசைகிறது
உயிர்மை ததும்பும் என் கனவுகள்.
உறைந்த நீராகி
அசையாமல் கிடக்கிறது காலம்.
முன்னறிவிப்பின்றிக் கசியும் வெளிச்சத்தில்
என் கண்களில் நகர்கிறது
உனது சாயலின் சங்கேதக் குறிப்புகள்.
நம் நினைவின் பிரியங்களைக் கையில் ஏந்தி
விரிந்த சிறகுகளில் சரிகிறது
அன்பின் விசும்பல்.

மேலும்

ரொம்பவும் நன்றிகள்! சார். 10-Jun-2016 11:02 pm
ரொம்பவும் நன்றிகள்! சர்பான். 10-Jun-2016 11:01 pm
மென்மையின் மறுபெயர் ரமேஷாலம்... .அருமை ஆலம்பனா. 10-Jun-2016 8:17 am
அழகான உணர்வுகளின் மெளனங்கள் கூட அன்பின் தீபத்தில் பார்வைகளில் மொழியாகும்..வாழ்க்கை எனும் சிறு நகர்வில் அன்பு என்பதே மனிதனை மனிதனாய் ஆள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jun-2016 5:28 am
மதிபாலன் அளித்த படைப்பை (public) மணிவாசன் வாசன் மற்றும் 10 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
27-Feb-2016 1:16 am

""""""""""""""""""""""""""""""""""""""""""""""
* நீரிலும் வாழ முடிந்தால்
நெருக்கடி தீரும் -
நிம்மதியாய் தவளை.

* பசுமையை விழுங்கி
உடம்பு வளர்க்கிறது
நெடுஞ்சாலை.

* இன்னும் சில மனைகளே
மீதம் உள்ளன -
நிலவில் விளம்பரம்.

* முறைவைத்துத் தலைமை
முன்னேறும் கூட்டுப்படை -
வலசைப் பறவை.

* இறப்புக்குப் பிறகும்
வாழ்க்கை இருக்கிறது -
செருப்பு.

* ஊழல் ஒழிப்பு மாநாடு
வெளிச்சம் தந்தது
திருட்டு மின்சாரம் .

*ஜன்னலே வீடு
எச்சிலே ஆயுதம்
பசியாறும் சிலந்தி !

*கழுத்துவரை ஓடும்
நதிவெள்ளத்துக்கு நன்றி -
நிர்வாண நாணல்.

* கண்விழித்து முயற்சி செய்தும்
கரு உருவாகவில்லை -
எழ

மேலும்

மிக்க நன்றி 29-Mar-2016 5:18 pm
அருமையான வரிகள் ! 29-Mar-2016 3:24 pm
கருத்துக்கு நன்றி . 28-Mar-2016 5:29 pm
* பசுமையை விழுங்கி உடம்பு வளர்க்கிறது நெடுஞ்சாலை. பசுமைப் புரட்சி போல்...புரட்சி செய்யும் ஹைக்கூ வரிகள் அருமை 28-Mar-2016 3:28 pm
ஜின்னா அளித்த எண்ணத்தை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 10 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
05-Feb-2016 2:59 am

ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 3

==============================

எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... 
வரும் சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...

நீங்கள் எல்லாம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கான தலைப்பு இதுதான்.... 

 நடமாடும் நதிகள் 

இந்த தொடரில் எழுத போகும் முதல் பட்டியல்:
****************************************************

  1. அகன் - (06-FEB-2016)
  2. ஆண்டன் பெனி - (07-FEB-2016)
  3. கவிஜி - (08-FEB-2016)
  4. ராஜன் - (09-FEB-2016)
  5. கருணா - (10-FEB-2016)
  6. சந்தோஷ் குமார் - (11-FEB-2016)
  7. பழனி குமார் - (12-FEB-2016)
  8. சுஜய் ரகு - (13-FEB-2016)
  9. ஜின்னா  - (14-FEB-2016)
  10. கட்டாரி சரவணா  - (15-FEB-2016)
  11. ஷ்யாமளா  - (16-FEB-2016)
  12. மணிமீ  - (17-FEB-2016)
  13. கனா காண்பவன்  - (18-FEB-2016)
  14. ஷாந்தி  - (19-FEB-2016)
  15. உமை  - (20-FEB-2016)
  16. குமரேசன் கிருஷ்ணன்  - (21-FEB-2016)
  17. ஜோசெப் ஜூலிசிஎஸ் - (22-FEB-2016)
  18. நிலா கண்ணன்  - (23-FEB-2016)
  19. முரளி TN   - (24-FEB-2016)
  20. கார்த்திகா AK  - (25-FEB-2016)
  21. கவித்தா சபாபதி  - (26-FEB-2016)
  22. மதிபாலன்  - (27-FEB-2016)
  23. கருகுவெலதா - (28-FEB-2016)
  24. மனொரெட் - (29-FEB-2016)
  25. தர்மராஜ்  - (01-MAR-2016)
  26. வேளாங்கண்ணி- (02-MAR-2016)
  27. புனிதா வேளாங்கண்ணி - (03-MAR-2016)
  28. இனியவன் - (04-MAR-2016)
  29. நாக ராணி மதனகோபால் - (05-MAR-2016)
  30. கயல்விழி - (06-MAR-2016)
  31. கே.விக்னேஷ் - (07-MAR -2016)
  32. ஆதிநாடா - (08-MAR -2016)
  33. செல்வ முத்தமிழ் - (09-MAR -2016)
  34. மு.ர - (10-MAR-2016)
  35. அனு ஆனந்தி - (11-MAR-20156)
  36. ஜெய ராஜ ரத்தினம் - (12-MAR-2016)
  37. எசேக்கியல் காளியப்பன் - (13-MAR-2016)
  38. விவேக் பாரதி - (14-MAR-2016)
  39. குருச்சந்திரன் கிருஷ் - (15-MAR-2016)
  40. ஸ்ரீ மதி மகாலட்சுமி - (16-MAR-2016)
  41. மணி அமரன் - (17-MAR-2016)
  42. அமுதா அமுதா - (18-MAR-2016)
  43. பனிமலர் - (19-MAR-2016)
  44. திருமூர்த்தி - (20-MAR-20156)
  45. சாய்மாரன் - (21-MAR-2016)
  46. உதயா சன் - (22-MAR -2016)
  47. சேகுவாரா கோபி - (23-MAR -2016)
  48. ராஜ்குமார் -(24-MAR -2016)
  49. காஜா - (25-MAR -2016)
  50. பொள்ளாச்சி அபி - (26-MAR -2016)
இன்னும் தொடரும் இந்த பட்டியல் தேவை பட்டால்....

கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
**************************************

மேலும் இந்த எண்ணத்தில் பதிந்துள்ள படம் மட்டும்தான் இந்த தொடருக்கு முழுவதும் 
பதிய வேண்டும் மற்றும் வேறு எந்த படமும் பயன் படுத்தக் கூடாது....

மேலும் இந்த தொடரை தவிர வேறு எந்த கவிதைக்கும் இந்த படத்தை பயன் படுத்தக் கூடாது...
அதே போல இந்த தொடரை தவிர வேறு எந்த கவிதைக்கும் இந்த தலைப்பை பயன் படுத்தக் கூடாது...

இந்த தொடருக்காக படத்தை தந்த எனது நண்பர் கமல் காளிதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்,

வளர்வோம் வளர்ப்போம்....

நட்புடன்,
ஜின்னா.

மேலும்

இரண்டாம் முறையாக வாய்ப்பளித்தமைக்கு நன்றிபாராட்டுகிறேன் நண்பரே! 06-Feb-2016 8:20 pm
மிக்க நன்றி... வளர்வோம் வளர்ப்போம்... 06-Feb-2016 12:04 am
மிக்க நன்றி... இனி யார் சொன்னாலும் படம் மாற்றப் பட மாட்டாது கவிஞரே.. இதுவே இறுதி... வளர்வோம் வளர்ப்போம்... 05-Feb-2016 11:30 pm
மிக்க நன்றி... வளர்வோம் வளர்ப்போம்... 05-Feb-2016 11:29 pm
agan - MSசுசீந்திரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2016 9:44 pm

சுயப்பாட்டு

பொய்சொல்லுவேன் பொய்யே சொல்லுவேன்
பொய்யிலே வீடுகட்டி  போணியும் செய்வேன்  
 நீங்க வீடு கட்டினா எனக்கு கமிஷன் தரணுங்க
 கமிஷன் இல்லையின்னா காலையில சல்லி மணல் இருக்காதுங்க...

நானொரு அரசியல்வாதிங்க
நல்லா படிச்சவங்க
நியாயம்    தெரிஞ்சவங்க  
 நாலடி   தள்ளிப்   போவாங்க  ....

விதம்   விதமா   பேசி   வலை   விரிப்பதிலே   நான்  கில்லாடி
 வேலை  இல்லா  பட்டதாரி  வேலை  தேடி  வந்திடுவார்  எனக்கு பின்னாடி
 எப்போதும்  என்வீட்டில்  எக்கச்சக்க  கூட்டம்தான்
அப்பாவிகள்  இருக்கும்  வரை  என்காட்டில  மழைதான்  -அடை  மழைதான்

                                                                                         ....(நானொரு...)

எதிர் கட்சி   காரனோடு   எப்போதும்   சண்டைதான்  
 ஆளும்   கட்சி   ஆகிவிட்டா   அப்போதும்   சண்டைதான்  
 எதிர்கட்சி  ஆளும்  கட்சி  இரண்டும்  ஒண்ணுதான்
 எப்படியும்  வந்து  சேரும்  மாமூலு   பெட்டிபெட்டியா (தான் )

                                                                         ( நானொரு..)  

சுசீந்திரன்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (244)

மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
கவி பாலு

கவி பாலு

திருவனந்தபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (245)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (249)

na.jeyabalan

na.jeyabalan

Thirnelveli nagar
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே