நடமாடும் நதிகள்-22 -மதிபாலன்

""""""""""""""""""""""""""""""""""""""""""""""
* நீரிலும் வாழ முடிந்தால்
நெருக்கடி தீரும் -
நிம்மதியாய் தவளை.

* பசுமையை விழுங்கி
உடம்பு வளர்க்கிறது
நெடுஞ்சாலை.

* இன்னும் சில மனைகளே
மீதம் உள்ளன -
நிலவில் விளம்பரம்.

* முறைவைத்துத் தலைமை
முன்னேறும் கூட்டுப்படை -
வலசைப் பறவை.

* இறப்புக்குப் பிறகும்
வாழ்க்கை இருக்கிறது -
செருப்பு.

* ஊழல் ஒழிப்பு மாநாடு
வெளிச்சம் தந்தது
திருட்டு மின்சாரம் .

*ஜன்னலே வீடு
எச்சிலே ஆயுதம்
பசியாறும் சிலந்தி !

*கழுத்துவரை ஓடும்
நதிவெள்ளத்துக்கு நன்றி -
நிர்வாண நாணல்.

* கண்விழித்து முயற்சி செய்தும்
கரு உருவாகவில்லை -
எழுத்தாளன்.

* புதைப்பதற்கு முன்பே
மூச்சுத் திணறுகிறது -
எரிவாயுக் குழாய் .
--------------------------------------------------------------------------------
நெஞ்சம் நிறைந்த நன்றி
""""""""""""""""""""""""""""""""""""""""""
தொடர் தொகுப்பாசிரியர் :திரு ஜின்னா
முகப்பட வடிவமைப்பு : திரு கமல் காளிதாஸ்
தொடர் ஒருங்கிணைப்பு : திரு முரளி T N
முகப்பட பெயர் செதுக்கல் : திரு ஆண்டன் பெனி

எழுதியவர் : மதிபாலன் (27-Feb-16, 1:16 am)
பார்வை : 412

மேலே