agan- கருத்துகள்

நீட் தேர்வு நுழைவு சீட்டும்
புளிச்சோறு டப்பாவும்..

தும்பிகள் பறக்கின்றன
சுதந்திரமாய் ......
வால் பிடித்து விளையாட
சிறுசுகளுக்கு பிடித்தளிக்கும்
அவனது விரல்கள் இல்லாமல்......!!
பொன்வண்டுகள் பூரிப்புடன்
திரிகின்றன....
நூல்கட்டி இழுத்து ,
மழலை மந்தைகளுக்கு
தீப்பெட்டிக்குள் போடுமவன்
விரல்கள் இல்லாமல்.....!!!
வண்ணப்பட்டம் பறக்க முடியாமல்
தவிப்புடன் தவிக்கும்
அவனது 'தம்பி'களுக்காய் .....
நீண்ட வால்கட்டி
நூலைச் சிம்பி விடுமவன்
விரல்கள் இல்லாமல்....!!!
சுட்டு வைத்த முறுக்குகளின்
போர்வையாய் எறும்புகள்..
தின்று தீர்த்து மீண்டும் மீண்டு
கேட்டு
ஆத்தாவை ரசிக்க வைக்கும் அவனில்லாமல்....!!
வீதியின் வீடுகளின் கண்ணாடிகள்
உடைய முடியாமல் உவகையுடன்-
அவனது பந்தடிக்கும் மட்டைகள்
விதவைகளாய் மூலைகளில் அவனில்லாமல்...!!
துரத்தி துரத்தி
நீர் பீச்சியடித்தி விளையாடும்
அவனது தங்கைகள்
மெளன மேடுகளில் அவனில்லாமல்...!!!
எங்கு நோக்கினும்
அவனுக்கான ஏக்க விழிகளை
வீசி விசிறியடித்து
விசில் அடிப்பதை மறந்த
அவனது
சேக்காலிகள் சோகமாய்
அவனில்லாமல்.... !!
"லே , சின்னவனே
வந்திட்டியாம்லே..
வா..வா...
வரகு அடை கருப்பட்டித்தூள் சாப்பிடுலே..
லே சின்னவனே..வந்திட்டியாம்லே..""
.....மூன்று மாதமாய் முனகலை
மூச்சாக்கி கிடக்கும்
அவன் அப்பாத்தா மட்டும்
நம்பிக்கை நாழிகைகளுக்குள்..!!!!.
எப்படி சொல்வேன்
எல்லோரிடமும் .....
புகைவண்டி வெடிவிபத்தில்
தேடப்படும் 'சந்தேக ' குற்றவாளிகளுள்
அவனும் ஒருவன் என
அள்ளிச்சென்ற
இராஜஸ்தான் போலீஸ்
கவனிக்கவில்லை
அவனிடமிருந்த பிடிங்கி எறிந்த
மஞ்சள் பையினுள் இருந்த
நீட் தேர்வு நுழைவு சீட்டையும்
புளிச்சோறு டப்பாவையும்.!!!
_ அகன்

விதை நெல்லும் நீட் தேர்வும்...

உடல்வலி உள்ளத்தின் நோவு
மருண்ட திசைகள்
புரியா மொழி
உறக்கம் மறுத்த இரவு
அச்சமூட்டிய பரிசோதனைகள்
நடுங்கிய விரல்கள் வழி
நட்டு வைத்த விடைநாற்றுகள் ......
......இவற்றுக்கெல்லாம்தான்
அப்பா காசு கொண்டுவந்திருந்தார்
-விதை நெல்லை விற்று....
அம்மாவின் பங்குக்கு தாலி....
அப்பாத்தாவும் பாம்படம் தொலைத்திருந்தாள்.
தங்கையின் கண்களில்
தமையனின்மருத்துவ ஒப்பனை
ஒட்டிக்கிடக்க
ஊர்மாறி ஊர்வந்த அவன்
“ நீட்”எழுதி
பசியோடு கிடக்கும் அப்பனுக்கு விளக்கம் கூற
வந்தனை வரவேற்றது
விதை நெல்காசில் பதராகிப் போன அப்பன்
ஊடகங்களின் இருநாள் தீனியாகிய அவன்
விறைத்துப்போயிருந்த அப்பா கைகளை
விரித்துப் பார்த்தான்
வடை ஒன்று .....பிஞ்சிப்போய்
தன் பசிக்காய்.....??!!!!!

- அகன்

எழுந்திருக்க விட்டாதானே....??? அதான் காவிரி ,மீத்தேன்,நீட்,எஸ்விசேகர்.....இப்படியெல்லாம் கிடக்குதுல்லா??

நன்றி தோழர்

மென்மையின் மறுபெயர் ரமேஷாலம்...
.அருமை ஆலம்பனா.

ரமேஷாலம் எப்படி உள்ளீர்கள் . நான் பேச வேண்டுமே!!!

நன்றி . பெரும்பாலும் உருவகத்தன்மை
கொண்டபுனைவுகள்
தனித்தனி அலகுகளாக இருப்பதால்
முழுமைப் புலத்தூண்டல் வழி அனுபவத் திளைப்பு விலகி நிற்கிறது.எனினும் கவிதை அசைவியக்க அழகியலின் ஈர்ப்பை
இயல்பு நிலைக்குக்
கொண்டு வரலாம்

நன்றி சபா.

இது கிணறு....

நிலத்தின் நீர்ம கண்கள்!
-கண்களின் வட்ட விரிவு!
-விரிவின் விரிப்பில்
உயிர்களுக்கான அமுதம்!

மண்ணில் புதைந்த மாயவட்டம்
நல்லதங்காளின் ஓய்வறை

பெண்களின் துயரக்கதை பெட்டகம்
ஆதவனின் முகம் பார்க்கும் கண்ணாடி

சகடையின் இராகத்திற்கு
வாளி ஜதி இசைக்கும் சங்கீதமேடை

மனித காவு கண்ட
யாககுழி(ஜாலியன்வாலாபாக்)

இருளில் மருமகள்களின்
விழிநீர் வழி மேடை

கைம்பெண்களின் அழுகைக்கான
ஆறுதல் அளிக்கும் நீர்மதரு

நல பிராத்தனைக்கு
ஜப்பானில் எதிர் ஒலிக்கூடம்

சாதி மறந்த ஊர் கூட்டுஉழைப்பின்
ஒற்றுமைக்களம்

அட்ரா சக்கை...பலே பாண்டியா...வெகு சிறப்பான படைப்பு. இதுப்போல் படைப்போர் குறைவு. சந்தம் கொஞ்சும் பிள்ளைத்தமிழ் வகைமை. வாழ்த்துகள் தோழா.

நல்ல படைப்பு......வாழ்த்துகள் தோழர்

தளத்தில் ரமேஷாலம் "" நீ வரும் நாளுக்காக " என அளித்த நல்ல படைப்பு என் நினைவில்....வாசித்து மகிழுங்கள்.


ஆண் பிள்ளை அழுதலும் ஆண்மையின் ஓர் அங்கமே....!!!

அட்ரா சக்கை.....பலே பாண்டியா...

மரபு மாமணியே ...தங்களின் படைப்புகளுள் இது என்னை ஆட்கொண்டு ஆலிங்கன விரல் ஊர்தல்களில் என் நொடிகள் கடக்கும் நிலை அளித்து விட்டது....

அழகும் இளமையும் எவருக்கும்
வயதும் நோயும் தைத்தளிக்கும்
பழம் பாயின் கிழிசல்களினூடே
பரவி மீள்பார்வை பார்க்கும் பருவம்
தொழுத கைகளின் தொங்கலில்
திமிர்நிறை தோள்களின் சரிவுகளில்
அழுதிடவும் வற்றின கண்களில் பிறக்கும்
ஆறடி நில சாசனமே முதுமை.


( எனக்கும் முதுமை வருகிறது என்பதற்கு சரியில்லாத எனது இவ்வரிகளே சாட்சி...)

இன்று நீங்கள்...நாளை நான்....பின்னொருநாள் எவரும்!!!

தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
_______________________________

கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை


இரண்டும் நன்று . வாழ்த்துகள்

நன்றி. ஹ..ஹ ....ரசங்களை வாசகன் புரிந்துக்கொள்ளவே ஹைக்கூ.மனோ..அவன் சிந்திக்க வேண்டுமல்லவா..?

எழுதுவேன் . காத்திரு தோழா

ஆடி முடித்தவனைக் கரை சேர்க்க
ஆடிக் கொண்டே வருகின்றன
நாளைய பிணங்கள். ...வேறு நிலாக்களின் வெட்டியான் பாதிப்போ ...நல்ல சிந்தனை

என் நினைவில் இரண்டு ஜப்பானிய ஹைக்கூக்கள் .

இரண்டு நிகழ்வுகளுக்கு ஜப்பானியர்கள் செல்ல தவறுவதில்லை -ஒன்று தள்ளாடும் அகவையிலும் கல்லறை விழாவுக்கு ஜப்பானியர்கள் செல்ல தவறுவதில்லை , மற்றது பூத்த செர்ரி மலர்களை கண்டு களிக்க ..

இதற்காக அவர்கள் இப்படி ஹைக்கூ அளித்துள்ளனர் :

பாஷோ
Basho (1644 – 1691)

Visiting tombs is
white hairs low
over canes.

கல்லறைகளுக்கு வந்து
நரை முடியர்கள் தலைசாய்ப்பர்
கைத்தடிகள் மேல் கவிந்து....இதைத்தான் நாம் இப்படி சொல்வது ; 'இன்று இவர் , நாளை நீ "


ஒனிட்சுரா
Onitsura (1660 – 1738)

The people view the cherry – bloom
Their skeletons wrapt in silks

செர்ரி பூப்பதைப்
பார்க்கும் மக்கள்
பட்டு மூடிய எலும்புக் கூடுகள்.வாழ்த்துக்கள் மனோ



மாணவர்களுக்குப் புரிந்தது
வன்முறைப் பாடம்
போராட்டத்தில் ஆசிரியர்கள்.

இவை இரண்டும் நன்று .

தலைப்பின்றி அளித்திருக்கலாமே ...வாசகனை சிந்திக்க வைக்காத்தானே ஹைக்கூ

நீரிலும் வாழ முடிந்தால்
நெருக்கடி தீரும் -
நிம்மதியாய் தவளை. .....ஜப்பானிய ஹைக்கூவில் தவளை ஒரு முக்கிய குறியீடு. பல பொருத்தி நோக்குவேன் .

ஜப்பானியர்களுக்கு மிகவும் பிடித்தவை தவளை இசையும் செர்ரி மலரும் . முதன்முதலாக ஜப்பானியர் இசைத்தட்டில் பதிந்ததும் தவளை பாடலே .
ஜப்பானிய ஹைக்கூவின் பிதாமகர் பாஷோ . இவரின் தவளை ஹைக்கூ புகழ் பெற்றது :

பழைய குளத்தில்
தவளை குதித்து
தண்ணீர் ஓசை

பாஷோவின் மாணவர்கள் இருவர் . கிககு மற்றும் ஹூகுஷி . இருவரும் தவளைப் பற்றி ஹைக்கூ அளித்துள்ளனர் இப்படி :




கிககு
Kikkaku (1653-1707)

See how a tree frog is swaying
perched on a banana leaf.

மரத்தவளை
என்னமாய் ஊசலாடுகிறது பாருங்கள்
வாழையிலை மேல் உட்கார்ந்து
...இங்கு தவளை என்பது மனிதனுக்கான குறியீடு ..வாழையிலை என்பது வாழ்க்கை . நம் பகுதிகளில் பொதுவாக தேரைதான் வாழை மரங்களில் காணப்படும்


கான்செட்சு
Kansetsu (1653-1707)
(குறிப்புகள் கிடைக்கவில்லை)

Could they be hyms?
frogs are chanting
in the temple well.

பக்திப் பாசுரங்களோ?
தவளைகள் பாடுகின்றன
கோயில் கிணற்றில்.

ஹோகுஷி
Hokushi
(குறிப்புகள் கிடைக்கவில்லை)

I have sold my paddy fields and now
the singing frogs kept me awake.

என் நெல் வயல்களை விற்றுவிட்டேன்
இப்போது தூங்காமல் கிடக்கிறேன்
பாடும் அத்தவளைகளால்....

..............ஜப்பானிய உழவன் இரவில் உறங்க தவளை ஓசையே தாலாட்டு என பழகி போன ஒன்று . நிலம் விற்றதால் உறக்கம் போனது

படம் வெகு யதார்த்தம். படைப்பு எவருக்கும் இறுதியில் ஒரு தோழன் உண்டென்பதை விளக்கும் படிப்பு. நன்று மனோ. வாழ்த்துகள் . ஒரு குழுவில் இக்கவிதையை பகிர்ந்துள்ளேன்.

சபா , நான் கருத்திட்டது சரிதானே ? எதுவும் தவறில்லையே..?


agan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே