நடமாடும் நதிகள் -25 ப்ரியா

வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________

மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு
வானம்
__________________________________________

தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
__________________________________________

நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள்
நட்சத்திரங்கள்
___________________________________________

இரவும் பகலுமாய்
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்
சூரியசந்திரன்
____________________________________________

கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________________________________

நித்திரை மேடையில்
நடக்கும் நாடகம்
கனவு
_____________________________________________

பணம் சேர்க்க வேலைதேடினான்
வேலையில் சேர பணம் தேடுகிறான்
லஞ்சம்
_____________________________________________

நேற்றைய சருகுகளின் உதிர்வில்
இன்றைய தளிர்களின் கண்ணீர்
மரணம்
_____________________________________________

தன் சொந்தங்களை இழந்து
தனியே தவிக்கிறது
இலையுதிர்காலமரம்.
______________________________________________தோழர் ஜின்னா
ஓவியர் காளிதாஸ்
முரளி ஐயா மற்றும் தோழர் ஆண்டன் பெனி
ஆகியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

எழுதியவர் : ப்ரியா (1-Mar-16, 7:06 am)
பார்வை : 587

மேலே