அன்பின் விசும்பல்

நிலவு இடம் பெயரும் இரவுகளில்
கோடையின் சுழலாய் மேலெழும்புகிறது
உன் பிரியத்தின் வாசனை.
இரவின் நீலத்தைக் குடித்தபடி
இடம் வலமாய் அசைகிறது
உயிர்மை ததும்பும் என் கனவுகள்.
உறைந்த நீராகி
அசையாமல் கிடக்கிறது காலம்.
முன்னறிவிப்பின்றிக் கசியும் வெளிச்சத்தில்
என் கண்களில் நகர்கிறது
உனது சாயலின் சங்கேதக் குறிப்புகள்.
நம் நினைவின் பிரியங்களைக் கையில் ஏந்தி
விரிந்த சிறகுகளில் சரிகிறது
அன்பின் விசும்பல்.

எழுதியவர் : rameshalam (9-Jun-16, 7:22 pm)
Tanglish : anbin visumbal
பார்வை : 164

மேலே