நானென்ற நான்

எதிர் நின்று என்னிடம் பேச
வலுவற்று
நிற்பதும் நானே...

எதற்குள் ஒளிந்து கொள்ள
நினைக்கிறேன்
நினைவுக்குள் ஒளிய
மறுக்கும் நான்...

தீராத் துயர் வேண்டி
திமிர் பிடித்த வலையை
பின்னிக் கொள்வதில் நானும்
ஓர் எதிரி...

நிஜமற்றவைகளை நிதானிக்காமல்
நிறுத்தி ஓடுவதில்
விண்மீனைத் துடிக்க விடும்
பகல்காரன் நானே...

தீர்த்த கரை வேண்டி
நீர் கொட்டி பிணமாகி மிதக்கும்
அற்புத மயக்கத்தில்
பின்னொரு என்னை மாயமாக்குகிறேன்
அதைவிட பயங்கர நிஜம்
இந்த நானென்று...!

கவிஜி

எழுதியவர் : கவிஜி (9-Jun-16, 3:02 pm)
பார்வை : 2373

மேலே