rameshalam - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : rameshalam |
இடம் | : mayiladuthurai |
பிறந்த தேதி | : 31-Jul-1965 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-May-2012 |
பார்த்தவர்கள் | : 2777 |
புள்ளி | : 2744 |
en kavidhaigalaip padikkum neengaldhaan
solla vendum.
thanippattamuraiyil..sollumpadiyaana aal illai naan.
ஜல்லிக்கட்டு தவறென்று
மல்லுக்கட்டும் மூடர்களே !
வாடிய பயிரைக்
கண்ட போதெல்லாம்
வாடியவன் வழி வந்தவர்
நாங்கள் ; வளர்த்த
பிள்ளைகளுக்கா
தீங்கு செய்வோம் !
அறவழியில் போராடுவதால்
அறிவிலிகள் என
நினக்க வேண்டாம் எம்மை !
பீரங்கியின் குண்டும்
துளைக்காத கோட்டை
எழுப்பியவன் வழித் தோன்றல் நாங்கள் !
புல்லுக்கட்டு தூக்க
வலுவில்லாதவனெல்லாம்
இன்று ஜல்லிக்கட்டை
எதிர்க்க வந்து விட்டான் !
புலியை அடக்கியவனின்
வீரப்பரம்பரையின்
கடைசி சொட்டு ரத்தம்
காயும் வரை ஈடேராது
உங்கள் எண்ணம் !
உயிர்வதை கண்டு
பொங்கி எழுவோரே !
தினமும் உணவுக்காக
ஆடும் , மாடும் ,கோழியும்
வெட்டுமிடம் ச
கள்
கட
உள்
கடவுள்
உயிர்
------------
உதட்டில் சிகரெட்
உதிர்க்கும் சாம்பலில்
உயிரும் கொஞ்சம் /
l
ஓயாமல் தேய்ந்து
இணையாமல் மிதந்து
கருமை படர்கிறது நிலவு .
சுற்றிப் பறந்து
சிறகொடிந்து கிடக்கிறது
இன்று தோற்றவனின் கனவு .
அவன் கண்களில் ததும்பும்
உடையாத நீர்க்குமிழியோ
கடல் மீது மிதக்கிறது .
முயற்சியின்
கிளர்ந்த கணம் ஒன்றில்
முனகித் திரும்புகிறது
வாழ்வின் குரல் .
அந்தக் கணத்தின்
இருளின் இசை திறந்து
முகிலுக்குள் சுழல்கிறது
அவன் கழுத்துப்
பூவின் சிறகுகள் .
துடிப்புகள் அதிகமாகி
திசை மீறிய கருவாகி
அவனின்
பரிதியாய் விடிகிறது பகல் .
ஓயாமல் தேய்ந்து
இணையாமல் மிதந்து
கருமை படர்கிறது நிலவு .
சுற்றிப் பறந்து
சிறகொடிந்து கிடக்கிறது
இன்று தோற்றவனின் கனவு .
அவன் கண்களில் ததும்பும்
உடையாத நீர்க்குமிழியோ
கடல் மீது மிதக்கிறது .
முயற்சியின்
கிளர்ந்த கணம் ஒன்றில்
முனகித் திரும்புகிறது
வாழ்வின் குரல் .
அந்தக் கணத்தின்
இருளின் இசை திறந்து
முகிலுக்குள் சுழல்கிறது
அவன் கழுத்துப்
பூவின் சிறகுகள் .
துடிப்புகள் அதிகமாகி
திசை மீறிய கருவாகி
அவனின்
பரிதியாய் விடிகிறது பகல் .
மின்னல்கள்
நிகழும் வெளி மீது
வளர்கின்றன
ஒரு கவிதையின் நட்சத்திரங்கள் .
ஒளியின் பிரதி
மேக நீர்ப்படலத்தின்
சிற்றலைகளில்
சிறு கனவுகளாகி மிதக்கிறது .
தூதாகும்
பறவையொன்றின் தாலாட்டில்
நினைவுகளின் விளிம்பில்
வருடுகிறது தொடுவானம் .
துயிலின் இசையில்
இமை ஊற்றின் ஆழத்தில்
கனவின் குமிழ்கள்
கண்களாகி விட ......
தானே மிதந்த கரு
இதயம் வருடி
உடைந்து சொரிகிறது
எழுத்துக்களாய் ....
இந்தக் காகிதத்தில் ..
மின்னல்கள்
நிகழும் வெளி மீது
வளர்கின்றன
ஒரு கவிதையின் நட்சத்திரங்கள் .
ஒளியின் பிரதி
மேக நீர்ப்படலத்தின்
சிற்றலைகளில்
சிறு கனவுகளாகி மிதக்கிறது .
தூதாகும்
பறவையொன்றின் தாலாட்டில்
நினைவுகளின் விளிம்பில்
வருடுகிறது தொடுவானம் .
துயிலின் இசையில்
இமை ஊற்றின் ஆழத்தில்
கனவின் குமிழ்கள்
கண்களாகி விட ......
தானே மிதந்த கரு
இதயம் வருடி
உடைந்து சொரிகிறது
எழுத்துக்களாய் ....
இந்தக் காகிதத்தில் ..
மௌனித்தது
திசை தவறி
ஆழ ஓடிய இருள் .
எழுகிறது
அதன் நிழல் ஒவ்வொன்றிலும்
வெறும் பதிலற்ற ஏன்?
உழன்று ... உருகி
தன்னைத் தானே விழுங்கி
கருமை படர்கிறது அதன் முகம் .
சுருங்கி
சுவடு பிறழ்ந்து
இறுகி உதிர்கிறது
அதன் உதடுகளிலிருந்து
மறையும் புன்னகை .
பதுங்கி
மொக்கு விரிக்கும்
மலரின் சிலிர்ப்பில்
முதிர்கிறது உள்ளீடாய்
அறியாத பீதியின் பயங்கரம் .
தளர்ந்த உதயத்தில்
தசை மினுக்கும் பூக்களில்
தெரியக்கூடும் ...
நேற்று தொலைந்த
மௌனத்தின்
திசை தவறிய
ஒரு ஒளித்துளியின்
கண்ணீர்த்துளி .
மௌனித்தது
திசை தவறி
ஆழ ஓடிய இருள் .
எழுகிறது
அதன் நிழல் ஒவ்வொன்றிலும்
வெறும் பதிலற்ற ஏன்?
உழன்று ... உருகி
தன்னைத் தானே விழுங்கி
கருமை படர்கிறது அதன் முகம் .
சுருங்கி
சுவடு பிறழ்ந்து
இறுகி உதிர்கிறது
அதன் உதடுகளிலிருந்து
மறையும் புன்னகை .
பதுங்கி
மொக்கு விரிக்கும்
மலரின் சிலிர்ப்பில்
முதிர்கிறது உள்ளீடாய்
அறியாத பீதியின் பயங்கரம் .
தளர்ந்த உதயத்தில்
தசை மினுக்கும் பூக்களில்
தெரியக்கூடும் ...
நேற்று தொலைந்த
மௌனத்தின்
திசை தவறிய
ஒரு ஒளித்துளியின்
கண்ணீர்த்துளி .
மழைச் சேறாகி
வழிகிறது மனம்.
இரவின் இடைவெளிகளில்
சூழும் சொல்...
வழி தவறிய குழந்தையாகி
கரையும் நிலவோடு
பேசிக் கொண்டிருக்கிறது.
இடையில்...
விழிப் பந்துகளில்
விளையும் அதிர்ந்த மௌனம்
தான் அறியாத
உனது முகவரியின் தூரங்களில்
அலைந்து கொண்டிருக்கிறது.
விரியாத என் சிறகுகளோ
நடைபாதை நழுவி
மௌனத்தின்
தனிமைக் குகைக்குள்
நிழல் தேடிப் பதுங்குகிறது.
இடையறா
இச் சூழலில்
அமைதி விலகும் உணர்வுகளால்
மழைச் சேறாகி வழிகிறது மனம்.
இனி ஒரு பொழுதும் நாம் சந்திக்கப் போவதில்லை
உலகம் உருண்டை என்பது
நம் அளவில் பொய்
உலகம் தட்டையானது
விளிம்பில் கூட நம் சந்திப்பு சாத்தியமில்லாதது
நீ ஒரு மூலையும்
நானொரு மூலையும்
மூளையில் தேக்கி கொள்ளலாம்
இனி இதயத்தில் இடமில்லை
இந்த நிலவை
இந்த இரவை
நாளைய பகல் அடித்து சென்று விடுவது போல
முடித்துக் கொள்ளலாம்
நிறுத்தி கொண்டால் வீழ்ந்து போக
இது ஒன்றும் மூச்சுக் காற்று அல்ல
தீர்ந்து போகாத வெளி காற்று வெளி
காற்றைப் போலத்தான் காதலும்
சிறு குழந்தையொன்று
தன் எச்சிலால்
தன் தவறுகளை அழித்துக் கொள்வதைப்போல
அன்பினால் அன்பை அறுத்துக் கொள்வோம் வா.. இல்லையில்லை போ..!
இது இரவல்ல
என் தனிமையின் நிழல்..!
--------------------------------------------
தனிமைக்கு நிர்வாணம் கூட
ஒரு நிவாரணமே....!
----------------------------------------
புகைத்தால்
புற்றுநோய் வரும்
கவிதையும் வரும் எனக்கு...!
--------------------------------------------
-------------------------------------------
தெற்கு தெருவில்தான்
பற்றி எரிகிறது
சமூக அவல நெருப்பு.
காத்திருக்கிறேன்.
என் வீட்டில் வந்து
எரியும் வரை...!
அதுவரை
நானும் ஒரு பொதுஜனமே..!
-------------------------------------------
இந்நாட்டில் நானொரு
மாபெரும் ஜனநாயகப்
பிழை....!
----------------------------------------
[ அஃது, வாண்திகழ் தண்திங்கள்...! ]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கருமுகில் திரையினில்
கனிவொளி பிறைமதி
நகர்வலம் வருமெழில்
உருவாக் கும்!
சுழலென வருமரு
உருவுடை சலனனும்
தொடவுன தருகினில்
தவமாக் கும்..!
தொடவரின் பிறைமதி
முகம்சிவந் துடன்முகில்
துகிலதை உடல்தனில்
உடையாக் கும்..!
ஒருஅரை யெழில்வளர்
பிறைவளர் வளர்மதி
கனவினில் கதிரவன்
களிதா னோ?
மறுவரை குறைபிறை
துயரெனுஞ் சிறைபிடி
மகளினை பகலவன்
மறந்தா னேன்?!
சுடவருங் கதிரவன்
கதிரினை யொடித்துடன்
மனங்கவர் மதியிடம்
விரையென் றேன்...!
விடுவவள் குணமது
குழவியின் குழைமதி,
நிறைமதி பொழுததில்,
நலமென் றான்...!
**********