மழைச் சேறாய் ஒரு மனம்
மழைச் சேறாகி
வழிகிறது மனம்.
இரவின் இடைவெளிகளில்
சூழும் சொல்...
வழி தவறிய குழந்தையாகி
கரையும் நிலவோடு
பேசிக் கொண்டிருக்கிறது.
இடையில்...
விழிப் பந்துகளில்
விளையும் அதிர்ந்த மௌனம்
தான் அறியாத
உனது முகவரியின் தூரங்களில்
அலைந்து கொண்டிருக்கிறது.
விரியாத என் சிறகுகளோ
நடைபாதை நழுவி
மௌனத்தின்
தனிமைக் குகைக்குள்
நிழல் தேடிப் பதுங்குகிறது.
இடையறா
இச் சூழலில்
அமைதி விலகும் உணர்வுகளால்
மழைச் சேறாகி வழிகிறது மனம்.