அவன் இவன்
பாட்டி சோசியர் சொன்ன மாதிரியே என்ற
மனைவி இங்கிலீசுவரிக்கு இரட்டைப்
ஆண் குழந்தைகள் பிறந்திருக்குது.
@@@@@@
உன்ற மனைவிக்கு இங்கிலீசுவரின்னு
யாருடா பேரு வச்சது தம்மேசு ?
@@@@@@
இங்கிலாந்தில் இருக்கிற அவளோட தாய்
மாமன் மம்ரீஷ்.
@@@@@@
சரி. சரி. இப்ப என்ன சொல்ல வந்த?
@@@@@#@
நான் இரட்டைக் குழந்தைகள் பிறக்குன்னு
எதிர் பார்க்கல. பிறக்கிற குழந்தை
பையனா இருக்கும்னு ஆசைப்பட்டு
குழந்தைக்கு நம்ம தமிழர் நாகரிகப்படி
'யுவன்'ங்கிற இந்திப் பேரை
வைக்கலாம்னு ஆசைப்பட்டேன்.
@@@@@@@
இப்ப ஒன்னும் கெட்டுப் போகுலடா
தம்மேசு. ஒரு பையனுக்கு 'அவன்'னு பேரு
வை. இன்னொரு பையனுக்கு 'இவன்'னு
பேரு வைடா.
@@@@@@@
அவன், இவன் தமிழ்ச் சொற்களாச்சே.
அந்தப் பேருங்கள வச்சா நம்ம குடும்பத்தை
நம்ம தமிழ் மக்கள்
மதிப்பாங்களா? தமிழ்ப் பேருங்களை வச்ச
நம்மளை தமிழர்களா ஏற்றுக்குவாங்களா?
@@@@@@
ஏண்டா தம்மேசு (தம்மேஷ்) பயப்படற?
அவன், இவன் இந்திப் பேருங்கனு
சொன்னாப் போதும். நம்ம தமிழ் சனங்க
வெறித்தனா "அவன், இவன் சுவீட்டு இந்தி
நேமுசு"ன்னு சொல்லி உன்ற
குழந்தைகளைக் கொஞ்சுவாங்கடா
தம்மேசு.
@@@@@@@@
அப்படியா சொல்லறீங்க பாட்டி பகிடீசுவரி?
@@@@@@
ஆமாண்டா தம்மேசு.
@@@@@@@
நீங்க ஒன்னு சொன்னா அது எனக்கு
வேத வாக்கு. 'அவன், இவன்' ஸ்வீட்டு
நேம்சு பாட்டி.