வட்டியில்லாக் கடன்

வட்டியில்லாக் கடன்

கருவறையில் என்னை சுமந்து
தன் உதிரத்தைப் பாலாக்கி
என்னை பிரசவித்து
மறு பிறவி எடுத்த தாய்க்கோ
நான் வட்டியில்லாக் கடனாளி....!

நீண்ட ஆயுளுடன் என்னை
பூமியில் படைத்த இறைவனுக்கோ நான் வட்டியில்லாக் கடனாளி...!

அகரம் முதல் அன்பு வரை
அறிவுள்ள மனிதனாய் எனை
உருவாக்கிய ஆசானுக்கோ
நான் வட்டியில்லாக் கடனாளி.....!

பள்ளியிலே வழி தவறி செல்ல
தடுத்து அறிவுரை கூறி
என்னை நல்வழிப்படுத்திய என் தோழிக்கோ நான் வட்டியில்லாக் கடனாளி.....!

கொடியநோய் என்னை தாக்க
அழுதபடி வைத்தியரிடம் ஓடிய
என் அன்னைக்கு ஆறுதல் கூறி
என்னைக் குணப்படுத்திய வைத்தியருக்கு நான் வட்டியில்லாக் கடனாளி...!

நற்செயல்களை மக்களுக்கு செய்ய
என் மனதை புரிந்து நல்ல வேலை தேடித்தந்த என் தந்தைக்கு நான் வட்டியில்லாக் கடனாளி...!

எழுதியவர் : சி.பிருந்தா (30-Oct-16, 9:57 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 67

மேலே