என்று தணியுமோ இந்த சாதி
மதம் கொண்ட யானையின் வெறியோ மறைகிறது சில நாட்களில்......
மதம் கொண்ட மனிதனின்
சாதி வெறியோ தொடர்கிறது
பல கோடி யுகங்களாய்.....!
மனிதா.! சமுதாயத்தில் எப்படி
சாதி வந்தது உன்னிடம்..?
நீ பிறந்த பின் பிறந்த சாதியோ உன்னை வாழ விடாமல்
தடுக்கிறதே முன்னின்று....!
அதிகாரத்திற்காய் உன் பாட்டன் தாத்தன் பூட்டிய அந்த சாதி விலங்கினை நீயாவது தகர்த்து எறிவாயா..? இல்லை உன் போன்ற வயிறுள்ள மக்களுக்கு அதை தாரைவார்த்துக் கொடுப்பாயா.?
தன் சுகத்திற்காக எவனோ எழுப்பிய சாதியை தெரிந்தும் அதை தெரியாதது போல் உடுத்திக் கொண்டு அழிக்கிறாயே மனத தர்மத்தை......!
மனிதனே! சவக்குழிகளிலும் சுடுகாடுகளிலும் சாதி வேலி போடுகிறாயே .....!
நீ செய்வது பிழையென்று
புரியவில்லையா உனக்கு?
வாருங்கள் தோழர்களே..!
சாதியை வேரோடு அழித்து
தர்மத்தை காக்க ஓரணியாய் செயற்பட்டு சாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் இன்றே.....!
சி.பிருந்தா
மட்டக்களப்பு.