வாழ்வின் குரல்

ஓயாமல் தேய்ந்து
இணையாமல் மிதந்து
கருமை படர்கிறது நிலவு .

சுற்றிப் பறந்து
சிறகொடிந்து கிடக்கிறது
இன்று தோற்றவனின் கனவு .

அவன் கண்களில் ததும்பும்
உடையாத நீர்க்குமிழியோ
கடல் மீது மிதக்கிறது .

முயற்சியின்
கிளர்ந்த கணம் ஒன்றில்
முனகித் திரும்புகிறது
வாழ்வின் குரல் .

அந்தக் கணத்தின்
இருளின் இசை திறந்து
முகிலுக்குள் சுழல்கிறது
அவன் கழுத்துப்
பூவின் சிறகுகள் .

துடிப்புகள் அதிகமாகி
திசை மீறிய கருவாகி
அவனின்

பரிதியாய் விடிகிறது பகல் .

எழுதியவர் : rameshalam (5-Nov-16, 11:58 am)
Tanglish : vaazhvin kural
பார்வை : 136

மேலே