நீ கொன்றவர்களில் நான் இல்லை

குழந்தைகளை கொல்
பள்ளிகளுக்கு தீயிடு
மக்கள் கூடும் இடத்தில்
வெடிகுண்டு வை

கடவுளை காதலி
மதத்தை நேசி
மனிதத்தை மாய்த்து விடு

பிஞ்சு உள்ளங்களில்
நஞ்சை தூவு
தீவிரவாதம் வளர்க்க
தினமும் போராடு

சுட்டுக்கொன்றாலும்
சுவர்க்கம் கிடைக்கும்
கைது செய்தாலும்
கலங்கிவிடாதே

உனக்காக்க குரல் கொடுக்க
நானிருக்கிறேன்
மனித உரிமை போரளியாக

ஏனெனில் நீ கொன்றவர்களில்
நானும் இல்லை
என்னை சார்ந்தவர்களும் இல்லை

எழுதியவர் : சூரிய காந்தி (5-Nov-16, 12:11 pm)
பார்வை : 84

மேலே